ஏர் இந்தியா விமானங்கள் பெற்று ஆறு அவாக்ஸ் விமானங்கள் தயாரிக்க உள்ள டிஆர்டிஓ

  • Tamil Defense
  • December 16, 2020
  • Comments Off on ஏர் இந்தியா விமானங்கள் பெற்று ஆறு அவாக்ஸ் விமானங்கள் தயாரிக்க உள்ள டிஆர்டிஓ

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆறு ஏர் இந்தியா விமானங்களை பெற்று அவாக்ஸ் விமானங்களாக டிஆர்டிஓ மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

10500 கோடிகள் செலவில் அவாக்ஸ் பிளாக் 2 விமானத்தை டிஆர்டிஓ மேம்படுத்த உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்காக ஆறு விமானங்கள் ஏர் இந்தியாவிடம் இருந்து பெறப்பட உள்ளது.பெறப்பட்டு அதில் 360 டிகிரி கண்காணிக்கும் ரேடார் பொருத்தப்படும்.

இதற்கு முன் தயாரிக்கப்பட்ட நேத்ரா அவாக்ஸ் விமானங்களை விட இந்த புதிய விமானங்கள் சக்தி மிக்கவை ஆகும்.இந்த திட்டத்திற்கு அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.

ஏர் இந்தியா விமானங்களிலேயே ரேடார்கள் பொருத்தப்பட்டு புதிய விமானங்கள் தயாரிக்கப்படுவதால் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ் 330 விமானங்கள் இந்தியா இறக்குமதி செய்வது சந்தேகமே.