இந்திய தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு-தொடர் தயாரிப்புக்கு தயார்

  • Tamil Defense
  • December 1, 2020
  • Comments Off on இந்திய தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு-தொடர் தயாரிப்புக்கு தயார்

இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனம் மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு டெர் தயாரிப்புக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த அமைப்பை பாரத் எலக்ட்ரானிக்ஸ் அமைப்பு தயாரிக்க உள்ளது.இந்த அமைப்பு இராணுவத்திற்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

இந்த அமைப்பு தான் பிரதமரின் பாதுகாப்பு அமைப்புகளின் சேர்க்கப்பட்டு அவரின் வசிப்பிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.மேலும் காரில் கொண்டு செல்லதக்க வகையும் அவரது பாதுகாப்பு அமைப்புகளில் சேர்க்கப்பட உள்ளது.பிரதமரின் பாதுகாப்பிற்கு ட்ரோன்கள் மூலம் ஆபத்து ஏற்படலாம் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சீனத் தயாரிப்பு ட்ரோன்கள் மூலம் எல்லைப் பகுதியில் ஆயுத சப்ளைகள் செய்து வருகின்றனர்.இதை தடுக்க டிஆர்டிஓ ஆக்டிவ் மற்றும் பேசிவ் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தியுள்ளது.இதன் மூலம் ட்ரோன்களை செயலிழக்க செய்யவாே அல்லது சுட்டு வீழ்த்தவோ முடியும்.

இந்த உள்நாட்டு தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு குறித்து விரைவில் டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி இந்திய பாதுகாப்பு படைகளுக்கு எழுத உள்ளார்.இந்த அமைப்பு முதன் முதலாக 2020 சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் களமிறக்கப்பட்டது.இரு முதல் மூன்று கிமீ தூரத்தில் வரும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்ய வல்லது.அல்லது லேசர் வைத்து கூட ட்ரோனை அடிக்கலாம்.

2019 முதலே பாக் பயங்கரவாதிகள் பஞ்சாபில் மீண்டும் பயங்கரவாதத்தை கொண்டு வரும் நோக்கில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதை பொருள்களை கடத்தி வருகின்றனர்.இதே வேலை ஜம்மு பகுதி சர்வதேச எல்லையிலும் நடைபெற்று வருகிறது.இதற்கென சீன ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.