டோகாலம் பிரச்சனைக்கு பின்பே எல்லை முழுதும் இராணுவ முகாம்கள் அமைத்த சீனா-அதிர்ச்சி தகவல்கள்

  • Tamil Defense
  • December 9, 2020
  • Comments Off on டோகாலம் பிரச்சனைக்கு பின்பே எல்லை முழுதும் இராணுவ முகாம்கள் அமைத்த சீனா-அதிர்ச்சி தகவல்கள்

2017 டோகலாம் பிரச்சனையின் போது இந்தியாவிடம் இருந்து கடும் எதிர்ப்பை கண்ட சீனா, அந்த பிரச்சனைக்கு பிறகு இந்தியாவுடன் மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற நோக்கோடு எல்லை முழுதும் இராணுவ முகாம்களை அமைக்க தொடங்கியுள்ளது.

எல்லைக்கோடுக்கு உள்புறம் சீனப்பகுதிக்குள் சுமார் 20 இராணுவ முகாம்கள் வரை சீனா அமைத்துள்ளது.எல்லையில் பிரச்சனை என்றால் சீன வீரர்களுக்கு உதவும் வகையில் இந்த 20முகாம்களும் அமைந்துள்ளன.

அனைத்து வசதிகளுடன் இந்த முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வீரர்களுக்கு தேவையான சப்ளைகள் வழங்கும் வகையில் இந்த முகாம்கள் உள்ளன.இவையனைத்தையும் டோகலாம் பிரச்சனைக்கு பின்பே கட்டியுள்ளது சீனா.

தற்போதும் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வருகிறது.இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் இராணுவம் கிழக்கு லடாக் பகுதியில் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

பங்கோங் ஏரியின் பிங்கர் 4க்கு அருகே உள்ள முக்கிய மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது இந்திய இராணுவம்.தெற்கு கரையில் ஸ்பங்குர் கேப் அருகே உள்ள முக்கிய மலைப்பகுதிகளையும் இந்தியா ஆக்கிரமித்துள்ளது.

பிரச்சனையை தீர்க்க இரு நாடுகளும் தற்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.