
மஞ்சள் கடற்பகுதியில் சீன கடற்படையின் ஜாங்ஜியாகோ வகை டைப் 056A கொர்வெட் ரக போர் கப்பல் நேரடி போர் பயிற்சியில் ஈடுபட்டது.
சீன மக்கள் ராணுவத்தின் வடக்கு தியேட்டர் கமாண்டில் கீழ் சீன கடற்படை கடற்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ரக டைப் 056A கோர்வெட் ரக கப்பல் ஜனவரி 2019 கடல் சோதனைக்கு பிறகு 2020 ஏப்ரலில் படையில் இணைத்தது சீனா.
டைப் 056 ரக கார்வெட் கப்பலின் நீர்மூழ்கி எதிர்ப்பு வகை தான் இந்த வகை டைப் 056A கப்பல் ஆகும். நீர் மூழ்கிகளை கண்டுபிடித்து அழிப்பதற்காக பல்வேறு ஆழ சோனார்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை பெற்றுள்ளது. இந்த புதிய கப்பலின் நீளம் 90 மீட்டர் மற்றும் அகலம் 11.14 மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட 1500 டன் எடை கொண்டது. இந்த கப்பல் மணிக்கு 46 கிலோமீட்டர் வேகத்தில் 6500 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது.
இந்த கப்பலில் ஒரு இலகுரக அல்லது நடுத்தர வகை Z11 அல்லது Z9 ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டுள்ளது.இந்த கப்பலில் ஒரு AK176 76mm கடற்படை துப்பாக்கி மற்றும் 2, 30mm தானியங்கி கேனன்கள் மற்றும் 8 பல குழல் ராக்கெட் ஏவு அமைப்புகள் மற்றும் 8-cell- FN3000N வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் இரு முக்குழல் 324mm டார்ப்பிடோ ஏவு குழல்கள் உள்ளன.