
சீனா மோதல் தொடங்கியது முதலே கிழக்கு லடாக் பகுதியில் தொடர்ந்து சீனா இராணுவ கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.கடந்த மூன்று மாதங்களாகவே சீனா இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் இராணுவ கட்டுமானங்களை வேகமாக எழுப்பி வருகிறது.இவற்றை செயற்கைகோள் படங்களும் உறுதிபடுத்துகின்றன.
அதே போல் எல்லை முழுதும் சீனா வான் பாதுகாப்பு ஏவுகணை தளங்களையும் அமைத்துள்ளது.இதைப் பற்றி ஏற்கனவே நமது தளத்தில் விரிவாக பதிவு செய்திருந்தோம்.
அதே போல கிழக்கு லடாக் பகுதியில் அக்சய் சின் அருகே சீனா புதிய வானூர்தி தளம் ஒன்றையும் அமைத்துள்ளது.இந்த வானூர்தி தளம் இந்தியாவின் தௌல் பெக் ஓல்டி வான்தளத்திற்கு நேர் எதிராக அமைந்துள்ளது.
இந்த தளமும், புதிய சாலையும் எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ளது.இது இந்தியாவிற்கு ஆதரவான விசயம் என்றாலும் சீனாவுக்கு இது எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
சீனாவின் இந்த புதிய ஹெலிபோர்ட் 1000மீ நீளமுள்ளதாக இருக்கலாம் என செயற்கைகோள் படங்கள் வழியாக தெரிகிறது.700மீ தான் தற்போது போடப்பட்டுள்ளது.பனி ஒரு காரணமாக இருக்கலாம்.