குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த கேடட் அமித் ராஜ்

  • Tamil Defense
  • December 24, 2020
  • Comments Off on குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த கேடட் அமித் ராஜ்

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அமித் ராஜ் புருலியா சைனிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

டிசம்பர் 7ஆம் தேதி , அமித் ராஜ் தனது சொந்த ஊரில் இருந்த போது, அவருக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து குழந்தைகளில் அலறல்களை கேட்டபோது
கேடட் அமித் ராஜ் தனது உயிரை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் போது கேடட் அமித் ராஜ் அவர்களுக்கு 85% தீக்காயம் ஏற்பட்டது. மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேடட் அமித் ராஜ் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 13 அன்று உயிரிழந்தார்.