உலகின் சிறந்த ஹொவிட்சர் அடாக்ஸ் தான்-டிஆர்டிஓ புகழாரம்

  • Tamil Defense
  • December 19, 2020
  • Comments Off on உலகின் சிறந்த ஹொவிட்சர் அடாக்ஸ் தான்-டிஆர்டிஓ புகழாரம்

48கிமீ தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல அடாக்ஸ் ஹொவிட்சர் தான் சிறந்த ஆர்டில்லரியாக உள்ளது.எனவே வெளிநாடுகளில் இருந்து ஆர்டில்லரிகள் இறக்குமதி தேவையில்லை.இந்திய இராணுவத்திற்கான 1800 ஆர்டில்லரிகள் தேவையை அடாக்ஸ் பூர்த்தி செய்யும் என டிஆர்டிஓ கூறியுள்ளது.

சீன எல்லை அருகே சிக்கிம்,பொக்ரான் சோதனை தளம் என அடாக்ஸ் சோதனைகளின் போது 2000 ரவுண்டுகள் சுட்டுள்ளது.தற்போது படையில் உள்ள போபர்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஏதோஸ் ஆர்டில்லரிகளை விட சிறந்தது அடாக்ஸ் என டிஆர்டிஓ கூறியுள்ளது.

அடாக்ஸ் எனப்படும் அதிநவீன இழுவை ஆர்டில்லரியை இந்தியாவின் பாரத் போர்ஜ் மற்றும் டாடா அதிநவீன சிஸ்டம்ஸ் லிமிடெட் தயாரிக்கும்.