தூரம் நீட்டிக்கப்பட்ட அஸ்திரா வான்-வான் ஏவுகணை அடுத்த வருடம் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளதாக டிஆர்டிஓ கூறியுள்ளது.அஸ்திரா மார்க்-2 எனப்படும் இந்த ஏவுகணை 160கிமீ தூரம் வரை சென்று தாக்க கூடியது.
தற்போது 110கிமீ வரை செல்லக்கூடிய அஸ்திரா மார்க்1 ஏவுகணையை இந்திய விமானப்படையின் மிக்-29 மற்றும் தேஜஸ் விமானங்களில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அஸ்திரா மார்க் 1 தற்போது சுகாய் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணைகளை பாரத் டைனமிக் லிமிடெட் விரைவில் தயாரிக்க உள்ளது.ரபேல் மற்றும் மிராஜ் விமானங்களை தவிர மற்ற அனைத்து விமானங்களுக்கும் அஸ்திரா ஏவுகணை பொருத்தப்பட உள்ளது.
இந்த வருடம் ஜீலை மாதம் 248 அஸ்திரா ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது.அஸ்திரா மாக் 4 வேகத்தில் அதாவது மணிக்கு 5500கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
அஸ்திரா தவிர இந்தியா மீட்டியர் ஏவுகணைகளையும் வாங்கியுள்ளது.இவை ரபேல் விமானங்களில் வான்-வான் இலக்கை தாக்கும் ஏவுகணை ஆகும்.ஆனால் இவை அஸ்திராவை விட விலை அதிகமானது ஆகும்.