Breaking News

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

  • Tamil Defense
  • December 13, 2020
  • Comments Off on 2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

ஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார்.

சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு  பணியில் இணைந்த போது அவருக்கு வயது வெறும் 21 தான்.அவருக்கு சண்டையிட செல்லமுடியவில்லையே என வருத்தம் இருந்தாலும் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மிக கவனத்துடன் செய்தார்.

இராஜஸ்தானின் நீமாஜ்-ல் தனது ஆறு மாத பயிற்சிக்கு பிறகு நாடாளுமன்றத்தை தாக்கிய பயங்கரவாதிகளை அவர் வேட்டையாடினார்.

2001 ம் ஆண்டு 13 டிசம்பர் மதியம் நெருங்கும் வேலை.நாடாளுமன்றம் 40 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இருந்தும் 100க்கணக்கில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைமைகள் வளாகத்திற்குள் இருந்தனர்.அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போன்றோர் அங்கு இருந்த முக்கிய தலைவர்கள் ஆவர்.

சிஆர்பிஎப் வீரர்கள்,டெல்லி காவல்துறை மற்றும் தோட்டம் பராமரிப்புவர் ,உதவியாளர்கள் என நாடாளுமன்ற வளாக உதவியாளர்கள் என அனைவரும் தத்தமது பணிகளை செய்துகொண்டிருந்தனர்.

எப்போதும் போல் அமைதியாய் சென்றுகொண்டிருந்த காலை.மதியம் நெருங்கும் வேளையில் திடீரென வளாகத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இந்தியா மட்டுமல்ல உலகையே உலுக்கியது.
ஒரு

ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் கேட் எண் 11 வழியாக வளாகத்திற்குள் நுழைந்தது.இதுபோன்றதொரு கார்கள் நாடாளுமன்றத்தில் நுழைவது சாதாரணமே.இருந்தாலும் சிஆர்பிஎப் வீரர் கமலேஷ் குமாரி கார் செல்வதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தார்.அந்த பெண் வீரர் கேட் எண் 1ல் பணி செய்துகொண்டிருந்தார்.அது கேட் எண் 11க்கு மிக அருகே இருந்தது.அது தான் விவிஐபிக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் கேட்.

கார் வளாகத்திற்குள் நுழைந்ததும் வேகமெடுக்க தொடங்கியது.இது அங்கு அசாதாரண நிகழ்வாகும்.கார்கள் உள்ளே வேகமாக செல்வதில்லை.

காரின் உள்ளே உள்ளவர்கள் அசாதரண முறையில் ஆயுதம் தரித்திருப்பதை உணர்ந்து மற்ற வீரர்களை வாக்கி-டாக்கியில் உசார்படுத்திக்கொண்டே 11ம் எண் கேட் நோக்கி ஓடினார்.

கான்ஸ்டபிள் குமாரியிடம் ஆயுதம் ஏதும் இல்லை.2001 தாக்குதலுக்கு முன்பு வரை நாடாளுமன்ற வளாகத்திற்குள் பணிபுரியும் பெண் வீரர்களுக்க ஆயுதம் ஏதும் வழங்கப்படவில்லை.கான்ஸ்டபிள் சுக்விந்தர் சிங் தான் கேட் எண் 11ல் இருந்தார்.அவரை உசார்படுத்த அவரை நோக்கி கான்ஸ்டபிள் குமாரி ஓடினார்.

மற்ற சிஆர்பிஎப் வீரர்கள் கான்ஸ்டபிள் குமாரி அவர்களின் வீரமிகுந்த செயலால் உசார் அடைந்த போது பயங்கரவாதிகள் கான்ஸ்டபிள் குமாரி நோக்கி சுட்டனர்.அவர் உடம்பில் 11 தோட்டாக்கள் பாய அவர் அங்கேயே வீரமரணம் அடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக கான்ஸ்டபிள் சுக்விந்தர் தற்கொலை பயங்கரவாதி மீது சுட்டார்.இதில் அவன் அங்கேயே வெடித்து சிதறினான்.இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

“நான் ஓடி பில்லர் பின்னாள் இருந்து தாக்க தொடங்கினேன்.அதே நேரத்தில் சுக்விந்தர் கேட் 3ன் பின்னாள் இருந்த சுவற்றில் இருந்தார்.நாங்கள் இருவரும் முதலாம் எண் கேட் நோக்கி ஓடிய ஒரு பயங்கரவாதியை நோக்கி தாக்கினோம்.இதில் அவன் வெடித்து சிதறினான்.அவன் இறந்ததை நான் பார்த்தேன்.நான் இடம்மாற  முயன்ற போது ,என்னால் முடியவில்லை.அந்த இடம் முழுதும் இரத்தமாக இருந்தது.நான் குண்டால் தாக்கப்பட்டிருந்தேன்”என தலைமை கான்ஸ்டபிள் Y B தாபா நினைவு கூர்கிறார்.

வளாகத்திற்குள் ஐந்து பயங்கரவாதிகள் பிரிந்து சென்று உள்ளே இருந்த அரசியல்வாதிகளுக்கு மேலும் மேலும் ஆபத்தை விளைக்க முயன்றனர்.அந்த நேரத்தில் தான் பயிற்சியில் இருந்து வந்திருந்த கான்ஸ்டபிள் சந்தோஷ் குமார் கேட் எண்6 ஐ காவல் செய்துகொண்டிருந்தார்.

” நான் வெடிப்புச் சத்தத்தை கேட்டவுடனேயே இது தாக்குதல் தான் என தெரிந்துகொண்டேன்” எனவும் ” நான் மரத்திற்கு பின்னால் இருந்து தாக்க தயாரானேன்.மூன்று பயங்கரவாதிகள் கேட் எண் 9 நோக்கி ஓடி வந்தனர் “என டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர்.மற்றொரு புறத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடந்ததால் பயங்கரவாதிகள் கேட் அருகேயே நிலை கொண்டனர்.

இங்கிருந்தே கான்ஸ்டபிள் குமார் பயங்கரவாதிகள் ஒருவர் ஒருவராக தாக்க தொடங்கினார்.
“நான் அவர்கள் அப்போது என்னை மிக அரிதாகவே பார்க்க முடியும்.என்னால் பயங்கரவாதிகளின் நெஞ்சு மற்றும் வயிற்றுபகுதிகளை பார்க்க முடிந்தது.நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரிந்திருந்தது” என சம்பவம் பற்றி கூறுகிறார்.

கான்ஸ்டபிள் இரு பயங்கரவாதிகளை சுட்டார்.பின் மறைந்திருந்து அவரது துப்பாக்கியில் மீண்டும் குண்டுகளை ஏற்றினார்.

“மூன்றாவது பயங்கரவாதி என்னை கண்டுகொண்டு அவனது ஏகே-47ல் இருந்து என்னை சுட்டான்.அதன் பிறகு நான் திருப்பி சுட்டதில் என் தோட்டா அவனை துளைத்து சென்றது” என கூறுகிறார்.

ஐந்தாவது மற்றும் கடைசி பயங்கரவாதி ஐந்தாம் எண் கேட் நோக்கி ஓடிவந்தான்.கான்ஸ்டபிள் சியாம்பிர் சிங் அந்த பயங்கரவாதியை வீழ்த்தினார்.வெறும் மூன்றே நிமிடத்தில் அவர் இதைச் செய்து முடித்தார்.

வீரர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்வதை ஒருங்கிணைத்தவர் இன்ஸ்பெக்டர் மோகன் பிரசாத்.

“அவன் வயதான மனிதர்.ஓய்வு பெறுவதற்கான நிலையில் இருந்தவர் ” என கான்ஸ்டபிள் குமார் அவர்கள் கூறினார்.ஆனால் “அவரிடம் பெரிய சக்தி இருந்தது.தாக்குதல் முழுதும் ஒரு கேட்டில் இருந்து மறுகேட் வரை ஓடி ‘Idhar se gher,  udhar se mar (இங்கிருந்து அவர்களை சுற்றிவளை,அங்கிருந்து அவர்களை தாக்கு) என கத்தினார்” என கூறுகிறார்.

இவர்கள் தான் அந்த பயங்கரவாதிகளை வீரத்துடன் எதிர்கொண்டனர்.பயங்கரவாதிகளால் வீரர் உட்பட ஒன்பது பேர் மரணமடைந்திருந்தனர்.

மேலும் தாக்குதல் நாடாளுமன்றத்திற்குள் சென்று அரசியல்வாதிகளுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

நான்கு சிஆர்பிஎப் கான்ஸ்டபிள்கள் சுக்விந்தர் சிங்,
Y B தாபா,சந்தோஷ்குமார்,சியாம்பிர் சிங் அவர்களுக்கு சௌரிய சக்ரா விருதும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் கமலேஷ் குமாரி அவர்களுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.முன்னாள் குடியரசு தலைவர் நாராயணன் அவர்கள் வழங்கினார்.அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண்மனியாக அவர் திகழ்கிறார்.

2001 தாக்குதலுக்கு பிறகு சந்தோஷ் குமார் சத்திஸ்கரின் தந்தேவாடாவில் நகசல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.மிகச் சிறந்த வீரராகவும் குண்டுகளை செயலிழக்க செய்யும் திறமையும் பெற்றிருந்தார்.அதன் பிறகு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.ஆனால் இன்னும்  பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறுகிறார்.

அவரது மனைவியும் இளம் மகளும் அவரின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கும் வேளையில் அவர் மீண்டும் தேச சேவையில் தன்னை அற்பணித்துள்ளார்.

வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம்