பயங்கரவாதத்தில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் இணைந்த பயங்கரவாதிகள்

  • Tamil Defense
  • December 27, 2020
  • Comments Off on பயங்கரவாதத்தில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் இணைந்த பயங்கரவாதிகள்

இந்திய மற்றும் மியான்மர் இராணுவம் தொடர்ந்து நடத்திய நடவடிக்கைகளின் பலனாக NSCN-K பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.இந்த பயங்கரவாத இயக்க தலைவர் நிக்கி ஸ்சும்மி இவரின் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர்.

2015ல் மணிப்பூரில் சந்தெல் மாவட்டத்தில் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் தேடப்பட்டு வந்தவர் தான் இந்த நிக்கி ஸ்சும்மி என்பவர். இவரை NIA தேடி வந்தது. இந்நிலையில் தற்போது NSCN-K தீவிரவாதிகள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதி வழியில் செல்ல முடிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் இந்திய ராணுவ தளபதி ஜென்ரல் எம்.எம் நரவனெ அவர்கள் மியான்மர் சென்று வந்தது குறிப்பிடதக்கது.

NSCN பயங்கரவாத இயக்கத்தில் இருந்து விலகி வந்த NSCN-K பயங்கரவாத இயக்கத்தில் சுமார் 60 முதல் 65 தீவிரவாதிகள் இருக்கலாம் என தகவல்கள் நிலவியது. தற்போது பாதுகாப்பு படைகளின் தொடர் நடவடிக்கைகளால் இனி பயங்கரவாத ஈடுபாடுகளில் ஈடுபடுவதில் அர்த்தம் இல்லை என்று உணர்ந்த இந்த பயங்கரவாத இயக்கம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டனர். மேலும் இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் இயங்கி வந்த பல பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் தற்போது மியான்மருக்கு தப்பி ஓடி விட்டனர்.

இந்தியாவுக்கு எதிராக இயங்கும் பயங்கரவாதிகளுக்கு மியான்மரில் அடைக்கலம் தரமாட்டோம் என மியான்மர் அரசு எற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த அக்டோபரில் இந்திய ராணுவ தளபதி நரவனெ மற்றும் வெளியுறவு செயலர் ஹஷ்வர்தன் சிங்கலா ஆகிய இருவரும் மியான்மர் சென்றனர், மியான்மர் அதிகாரிகளின் சந்திப்பின் போது இரு நாட்டு இராணுவ உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேசப்பட்டது.

மேலும் இந்திய தனது தாக்கும் நீர்மூழ்கியான ஐ என் எஸ் சிந்துவீர் நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நீர்மூழ்கியை கடந்த சனிக்கிழமை அன்று மியான்மர் தனது படையில் இணைத்துள்ளது.