அடுத்த ஏப்ரலுக்குள் லடாக்கில் 36 வானூர்தி தளங்கள்

  • Tamil Defense
  • December 18, 2020
  • Comments Off on அடுத்த ஏப்ரலுக்குள் லடாக்கில் 36 வானூர்தி தளங்கள்

லடாக்கில் உள்ள பயணிக்க முடியாத இடங்களுக்கு 24×7 இணைப்பை ஏற்படுத்தவும் அங்கு சுற்றுலாவை மேம்படுத்தவும் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 36 வானூர்தி தளங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணைப்பு மற்றும் சுற்றுலாவை தாண்டி தற்போது சீனாவுடன் மோதலில் உள்ள இராணுவ படைகளுக்கு இந்த தளங்கள் மிகுந்த உதவிகரமானதாக இருக்கும்.

தற்போது கட்டுமானத்தில் உள்ள 36 வானூர்தி தளங்களின் செயல்பாடுகளை லடாக்கின் துணை நிலை ஆளுநர் ஆர் கே மாதூர் அவர்கள் ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லே மாவட்டத்தில் தெம்சோக்,ஹான்லே,ஹர்னக்,கோர்ஷோக்,சுமூர்,டங்ட்சே,சூசுல்,ஸயோக்,ஸ்கைம்படா,டிப்லிங்,நெர்யாக்ஸ்,கஞ்சி,மர்கா,பனாமிக்,வாரிஸ்,லர்க்யாப்,அகயாம்,டிஸ்கிட் மற்றும் சுமோர் ஆகிய இடங்களில் கட்டுமானம் நடைபெறுகிறது.

அதே போல கார்கிலில் குர்பதாங்,படாலிக்,சாபி,பர்சூ,செசெஸ்னா,செபர்டு நாலா,ரங்தும்,டங்கோல்,படும்,லாங்நக்,ஷங்லா,டோங்ரி,திராஸ்,மினாமராக்,சிக்தான்,நம்கிலா மற்றும் ஹினஸ்கோட் ஆகிய இடங்களில் ஹெலிபேட் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது.

லடாக்கில் இதுவரை நடைபெற்ற வானூர்தி தள கட்டுமானங்களிலேயே இந்த திட்டம் மிகப் பெரிய திட்டம் ஆகும்.ரிமோட் இடங்களை இணைப்பது தாண்டியும் மோதல் என நடந்தால் இந்த தளங்களை இந்திய இராணுவம் உபயோகிக்க முடியும்.