2020 மட்டும் 203 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள இந்திய ராணுவம்

  • Tamil Defense
  • December 30, 2020
  • Comments Off on 2020 மட்டும் 203 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள இந்திய ராணுவம்

காஷ்மீரில் இந்த வருடம் மட்டும் பாதுகாப்பு படைகள் 166 உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளிட்டு 203 பயங்கரவாதிகளை மொத்தமாக வீழ்த்தி உள்ளனர்.

அதைப்போல இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 49 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். இதில் 9 பயங்கரவாதிகள் தானாக முன்வந்து சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஆகிய படைப்பிரிவுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதைப்போல இந்த வருடம் மட்டும் பாதுகாப்பு துறையினர் 14 கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றியுள்ளனர். ஆனால் சென்ற வருடம் 36 கண்ணிவெடிகள் கண்டறிந்து அகற்றியுள்ளது வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 இல் மட்டும் கிட்டத்தட்ட 158 பயங்கரவாதிகளும், 2018யை பொருத்தவரை 215 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டன.