இந்தியாவில் நுழைய இருக்கும் 200 பயங்கரவாதிகள்- அதிர்ச்சி தகவல்

  • Tamil Defense
  • December 29, 2020
  • Comments Off on இந்தியாவில் நுழைய இருக்கும் 200 பயங்கரவாதிகள்- அதிர்ச்சி தகவல்

குளிர் காலத்தை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதத்தை மீண்டும் ஒரு முறை அதிகப்படுத்தி இருக்கிறது பாகிஸ்தான். குளிர் காலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பும் நோக்கில் பாகிஸ்தான் முழுவீச்சில் செயல்படுவதாக முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டுகோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 15வது கார்ப்ஸ் படை பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ அவர்கள் கூறுகையில் கிட்டதட்ட 200 முதல் 250 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ இருப்பதாக கூறியுள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டுகோடு மற்றும் தெற்கு பீர் பாஞ்சல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ கூடும் என்பதால் இந்த பகுதியில் இந்திய ராணுவம் பல அடுக்கு பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.மற்றும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ துணை தளபதி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பு வருகிறது. குளிர் காலத்தில் இது போன்ற ஊடுருவல் அதிகரிப்பது வழக்கம் ஆகும். இதை தவிர பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது இதற்கு இந்திய சார்பில் தக்க பதிலடியும் கொடுக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் எந்த ஒரு அத்துமீறலுக்கும் தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜூ அவர்கள் கூறியுள்ளார்.