Breaking News

Day: December 4, 2020

ட்ரைடென்ட் நடவடிக்கை

December 4, 2020

1971 போரில் கராச்சி துறைமுகம் தான் பாக் கடற்படையின் தலைமையகமாக இருந்தது.அதன் பெரும்பாலான கப்பல்கள் அனைத்தும் அங்கு தான் நிலை கொண்டிருந்தன.மேலும் பாகிஸ்தான் கடல்சார் வணிகம் அனைத்திற்கும் அது தான் தலைமையிடம்.அந்த நேரத்தில் இந்தியக் கடற்படை போர்க்கப்பல்கள் அந்த துறைமுகத்தை சுற்றி பாதுகாப்பான இடத்தில் கடல் தடை ஏற்படுத்த அது பாகிஸ்தானுக்கு பெரும் இடியாக விழுந்தது.கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பே பாகிஸ்தான் தலைமைக்கு மிக முக்கியம்.அதனால் கடற்வழி தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகதவாறு கடற்படையின் அனைத்து சக்திகளும் […]

Read More

இந்தியா-பாக் கடற்படை போர் 1971- பாகம் 7

December 4, 2020

திட்டமிட்டது போலவே, 4 டிசம்பர் அன்று தாக்கும் குழு கராச்சியிலிருந்து 290 மைல் தொலைவு பகுதியை அடைந்திருந்தது.அது பாகிஸ்தான் விமானப் படையின் ரோந்து விமானங்கள் செல்லும் வான் பரப்பிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இருந்தது.1971 சமயங்களில் பாக் விமானப்படை விமானங்களில் இரவில் குண்டுவீச தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாதிருந்தது.எனவே இந்தியக் கடற்படை இரவில் கராச்சியை நெருங்கி தாக்க முடிவு செய்திருந்தது. பாகிஸ்தான் நேரப்படி இரவு 10.30, இந்தியத் தாக்கும் கப்பல் குழு காராச்சிக்கு 210 மைல் பகுதியை நெருங்கியது.கராச்சியை நெருங்கியதும் […]

Read More

இந்தியா-பாக் கடற்படை போர் 1971- பாகம் 6

December 4, 2020

அட்மிரல் S.M. நந்தா அவர்கள் அக்டோபர் 10, 1915ல் பஞ்சாபில் பிறந்தவர்.கடற்படையில் இணைவதற்கு முன் கராச்சி  துறைமுகத்தில் வேலைபார்த்தார். நந்தா அவர்கள் ராயல் இந்திய கடற்படையில் இணைந்து,இரண்டாம் உலகப்போரின் போது தன்னார்வமாக பணியாற்றினார்.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியக் கடற்படையில் இணைந்தார். 1948ல், INS டெல்லி போர்க்கப்பலில் முதல் லெப்டினன்டாக தனது பணியை தொடங்கினார். அதன் பிறகு 1951ல் INS ரஞ்சித்தின் தலைமைப் பணியை ஏற்றார்.அதன் பிறகு பல்வேறு பணிகளின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.பிறகு ரியர் அட்மிரலாக பதவி […]

Read More

இந்தியா-பாக் கடற்படை போர் 1971- பாகம் 5

December 4, 2020

PNS ஹேங்கொர் ஒரு டாப்பின் வகை டீசல்-மின்சார நீர்மூழ்கி ஆகும்.இந்த நீர்மூழ்கி பிரான்சிடம் இருந்து 1969ல் பாகிஸ்தான் வாங்கி தனது கடற்படையில் இணைத்திருந்தது.கடந்த 2006ல் படையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வளிக்கப்பட்டது.15-22கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது.13 கிமீ/மணி வேகத்தில் 20,000கிமீ வரை கூட செல்லும் ஆற்றல் கொண்டது.30 நாட்கள் வரை கடலிலேயே இருக்க வல்லது.300மீ ஆழம் வரை நீருக்கடியில் செல்ல வல்லது.இதில் 12 டர்பிடோக்கள் (நீருக்கடியில் ஏவப்படும் ஏவுகணை போன்ற அமைப்பு)வைக்க முடியும். 1971 நவம்பர் 25/26 நடு இரவில் […]

Read More

இந்தியா-பாக் கடற்படை போர் 1971-பாகம் 4

December 4, 2020

இந்தச் சமயத்தில் இந்தியக் கடற்படை இரகசிய கடற்படை நடவடிக்கைகளை தொடங்கியது.அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.1971 வருடத்தின் டிசம்பர் மாத இறுதியில் மேற்கு பாகிஸ்தானிடம் இருந்து ,கிழக்கு பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியக் கடற்படை கிழக்கு பாகிஸ்தான் துறைமுகங்களை சுற்றி தனது போர்க்கப்பல்கள் கொண்டு தடையை ஏற்படுத்தியது.இதனால் கிழக்கு பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பல்கள் தங்கள் துறைமுகங்களிலேயே முடங்கிப் போயின.அது மட்டுமல்லாமல் எட்டு வெளிநாட்டு வணிக  கப்பல்களும் மாட்டிக் கொண்டன.இதனால் பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் ,காஸி நீர்மூழ்கியை களமிறக்க சொல்லி பாக் கடற்படையிடம் […]

Read More