
பலுசிஸ்தானின் ஹர்னாய் மாவட்டத்தில் பாக் இராணுவத்தின் ஃப்ரான்டியர் கார்ப்ஸ் படை வீரர்கள்மீது பலுசிஸ்தான் விடுதலை முன்னனி போராளி குழுவை சேர்ந்த வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஏழு பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹர்னாய் மாவட்டத்தின் ஷராக் பகுதியில் உள்ள பிரான்டியர் கார்ப்ஸ் படைப் பிரிவின் நிலையை போராளிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.பாக் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நிலையில் 14 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பாக் இராணுவம் போராளிகளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.