தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை எல்லையில் நிறுத்தி உள்ள சீனா-விமானப் படைத் தளபதி பதாரியா

  • Tamil Defense
  • December 30, 2020
  • Comments Off on தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை எல்லையில் நிறுத்தி உள்ள சீனா-விமானப் படைத் தளபதி பதாரியா

சில நாட்களுக்கு முன் சீனாவின் மேற்கு கட்டளைகத்தின் கீழ் சீனாவின் விமானப்படை விமானங்கள் அதி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. சீன விமானப் படை தனது j11 விமானங்களின் உதவியுடன் மலைப் பகுதிகளை ஒட்டி பறந்து இலக்கை எப்படி தாக்குவது என்பது குறித்த போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போர்ப் பயிற்சி சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த j11 விமானங்களை தான் சீன விமானப்படை வான் ஆதிக்கத்திற்கும் மற்றும் தாக்குதல் போன்ற முக்கிய ஆபரேஷன்களுக்கும் பயன்படுத்துகிறது.

இதற்கு பதிலடியாக இந்தியாவும் தேவையான ஆயுதங்களை எல்லையில் நிறுத்தி உள்ளதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

எல்லையில் சீனா ரேடார்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ,தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை ஆகியவைகளை நிறுத்தியுள்ளது.