
இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா மற்றும் அமெரிக்க கடற்படையின் சூப்பர் கேரியர் நிமிட்ஸ் உடன் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் கடற்படைகளின் இரு டெஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள் இணைந்து மலபார் பயிற்சியின் இரண்டாம் கட்ட பயிற்சியை வரும் நவம்பர் 17 முதல் 20 வரை நடத்த உள்ளன.
விக்ரமாதித்யாவின் மிக்-29கே விமானங்களும் ,நிமிட்சின் F-18 விமானங்களும் இந்த பயிற்சியில் ஈடுபடும்.நான்கு நாடுகளும் இணைந்து ஒரு சக்திவாய்ந்த கூட்டனியை ஏற்படுத்தி உள்ளன.
இந்திய கடற்படை லடாக் பிரச்சனை காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் முழுமையான தயார் நிலையில் உள்ளது.