மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா வர உள்ள கேரக்கால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம்

  • Tamil Defense
  • November 7, 2020
  • Comments Off on மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா வர உள்ள கேரக்கால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம்

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான கேரக்கால் நிறுவனம் இந்திய இராணுவத்திற்கு 93000 கார்பைன்களை வழங்கும் ஒப்பந்தத்தை வென்றுள்ளது.மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் சிறிய ரக துப்பாக்கிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

கேரக்கால் நிறுவனத்தின் சிஇஓ ஹாமத் சலீம் கூறுகையில் ” கேரக்கால் நிறுவனம் வகையான சிறிய ரக பிஸ்டல்களையும் தயாரித்து வருகிறது” என கூறியுள்ளார்.

ஆர்டர் இன்னும் முடிவுபெறாத நிலையில் உள்நாட்டில் இணைந்து தயாரிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் குறித்து விரைவில் அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்த 12 மாதத்திற்குள் துப்பாக்கிகள் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்படும்.இந்த துப்பாக்கிகள் சிறந்த தரத்துடன் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.