பயங்கரவாத தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம்
மாருதி காரில் சென்ற மூன்று பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் நோக்கி நடத்திய தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இராணுவ வீரர்கள் அந்த காரை துரத்திய சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க மாபெரும் தேடுதல் வேட்டையை இராணுவ வீரர்கள் தொடங்கியுள்ளனர்.
கிடைத்த முதல்கட்ட தகவல்படி ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்ரீநகர்-பாரமுல்லா பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காஷ்மீர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலிஸ் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
முதல் கட்ட தகவல்படி மாருதி காரில் பயணித்த மூன்று பயங்கரவாதிகளில் இரு ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.வீரர்கள் நோக்கி சராமாரிய சுட்டத்தில் இரு வீரர்கள் படுகாயமடைந்து பின்பு வீரமரணம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒன்று அல்லது இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.