சீன கடற்படை பெரிய அளவு போர்பயிற்சி எடுத்துகொண்டிருந்த வேளையில் கடற்படையின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் இரு அமெரிக்க குண்டுவீசு விமானங்கள் நுழைந்துள்ளன.
அத்துமீறல் என்று வர்ணிக்கப்படும் இந்த சம்பவம் சீன கடற்படை பெரிய அளவில் போர்பயிற்சி நடத்திகொண்டிருக்கும் போது நடந்துள்ளது.
பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்தது அமெரிக்காவின் B-1B குண்டுவீசு விமானங்கள் ஆகும்.இது போன்ற விமானங்களை அமெரிக்கா வழக்கமாக உளவுப் பணிகளுக்கு அனுப்பாது என்பது குறிப்பிடத்தக்கது.