லான்ஸ் நாய்க் நாசிர் அகமது வானி
1 min read

லான்ஸ் நாய்க் நாசிர் அகமது வானி

காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் செகி அஷ்முஜி கிராமத்தை சேர்ந்தவர் தான் லான்ஸ் நாய்க் நசிர் அகமது வானி அவர்கள்.இளவயதில் பயங்கரவாத இயக்கத்தில் இருந்த அவர்கள் பின்னாளில் மனம் திருந்தி 2004ல் இராணுவத்தில் இணைந்தார்.அவர் 162வது பட்டாலியன் பிராந்திய இராணுவத்தில் இணைந்தார்.இந்த பட்டாலியன் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி பட்டாலியனுடன் இணைந்து பணியாற்றியது.பல்வேறு ஆபரேசன்களில் கலந்துள்ள அவர் ஒரு தலைசிறந்த வீரராகவே விளங்கினார்.

அவரது சேவையின் போது சுமார் 17 மிக முக்கிய ஆபரேசன்களில் கலந்து கொண்டு இரு முறை சேனா விருது பெற்றுள்ளார்.பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த வேளையிலும் அவர் நாட்டுக்காக அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார்.

சோபியான் ஆபரேசன்: 25 நவம்பர் 2018

2018 நவம்பர் மாதம் லா/நா வானி அவர்களின் படைப் பிரிவு சோபியானில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.சோபியானின் ஹிராபூர் கிராமத்தில் சில முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான உளவு தகவலை அடுத்து படைப் பிரிவுகள் அங்கு சென்று அந்த பகுதியை சுற்றி வளைக்க முடிவு செய்தன.பயங்கரவாதிகளை வீழ்த்த சென்ற 34வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைப்பிரிவில் லா/நா வானி அவர்களும் இடம்பெற்றிருந்தார்.

பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நெருங்கிய வீரர்கள் விரைவில் ஆக்சனை தொடங்கினர்.பயங்கரவாதிகள் இருப்பிடத்தை சுற்றி வளைத்த வீரர்கள் அவர்கள் தப்புவதற்கு ஏற்ற அனைத்து வழிகளையும் அடைத்தனர்.

இதை உணர்ந்த பயங்கரவாதிகள் திடீரென வீரர்கள் மீது கிரேனேடு வீசு துப்பாக்கியால் சுட்டு தப்பியோட முயற்சித்தனர்.இதை கண்ட லா/நா வானி துப்பாக்கி சூடுகளையும் பொருட்படுத்தாது முன் சென்று ஒரு பயங்கரவாதியை வீழ்த்தி முன்னேறினார்.மற்றொரு பயங்கரவாதி பதுங்கியிருந்த அறையை நோக்கி கிரேனேடு வீச முன்னால் சென்றார்.பயங்கரவாதி ஜன்னல் வழியாக தப்பியோட முயன்ற போது அவனை தடுத்த வானி அவர்கள் கையால் தாக்கினார்.இந்த கைச்சண்டையில் காயமடைந்த போதும் பயங்கரவாதியை வீழ்த்தினார்.
காயமடைந்த போது தான் மீட்கப்படாமல் மீதமிருந்த பயங்கரவாதிகளை வீழ்த்த ஆக்ரோசத்துடன் தயாரானார்.

மீண்டும் ஒரு பயங்கரவாதியை மிக குறுகிய தொலைவில் இருந்து காயப்படுத்தினார்.ஆனால் தற்போது அவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டு பின்பு அவர் வீரமரணம் அடைந்தார்.

அவரது வீரதீரம் காரணமாக அவருக்கு மிக உயரிய இராணுவ விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.