ஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த்

ஹவில்தார் கஜேந்தர் அவர்கள் உத்ரகண்டின் கனேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.ஜனதா இன்டர் கல்லூரியில் தனது படிப்பை முடிந்த கஜேந்தர் அவர்கள் படிக்கும் காலத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாக அவரது ஆசிரியர்கள் நினைவு கூறுகின்றனர்.

1991ல் கார்வால் ரைபிள்ஸ் பிரிவில் இணைந்தார் கஜேந்தர் அவர்கள்.அதன் பின் 10வது பாரா சிறப்பு படையில் இணைந்தார்.1999 கார்கில் போரிலும் கஜேந்தர் அவர்கள் பங்கெடுத்துள்ளார்.சிறந்த கமாண்டாவோக வலம் வந்த கஜேந்தர் அவர்கள் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடி படையில் இணைந்தார்.

ஆபரேசன் பிளாக் டொர்னாடோ

2008 நவம்பர் மும்பை தாக்குதலில் மும்பையின் முக்கிய இடங்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டன.அதே போலவே நாரிமன் ஓட்டலும் தாக்கப்பட்டு அங்கிருந்த யூதர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.இரு நாட்களாக இதே நிலை தொடர்ந்தது.

இந்த நிலையில் தான் தேசியப் பாதுகாப்பு படை களமிறக்கப்பட்டது. National Security Guard’s 51 Special Action Group இந்த நிலையை கட்டுப்படுத்த அனுப்பப்பட்டது.

தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் டெல்லியில் இருந்து கடற்படை வானூர்தியில் நரிமன் ஓட்டலின் மேல் பகுதியில் பறந்து நிலைமையை ஆராய்ந்தனர்.முதல் நாள் 9 பேர் மீட்கப்பட்டனர்.அடுத்த நாள் ஓபராய் ஓட்டலில் மீது தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் இறங்கினர்.பக்கத்து கட்டிடங்களில் சினைப்பர் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிற்க ,உள்ளே சென்று சூறாவளியாய் சுழன்றனர்.

தனது வீரர்களுக்கு தலைமை தாங்கி ஹவில்தார் அவர்கள் பயங்கரவாதிகள் இருப்பிடம் நோக்கி சென்றார்.ஒரு பயங்கரவாதியை பார்த்து அவர், பயங்கரவாதி தப்பிக்க முயற்சி செய்வதை தடுக்க அவன் மீது துப்பாக்கியால் சுடும் போது மற்றொரு பயங்கரவாதி அவர் மீது கிரேனேடு எடுத்து வீசியதும் அவர் படுகாயம் அடைந்தார்.

தற்போது பின்வாங்கினால் தனது சக வீரர்களும் காயமடைவர் மேலும் இந்த நிலையை பயன்படுத்தி முன்னகர்ந்தால் அடுத்து அடுத்து கமாண்டாே வீரர்கள் நிலையை சாதகமாக்கி பயங்கரவாதிகளை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த அவர் பின்வாங்காமல் முன்னகர்ந்தார்.முன் சென்று பயங்கரவாதி மீது மேலும் சில தோட்டாக்களை செலுத்தி அவனை வீழ்த்தினார்.இந்த சமயத்தை பயன்படுத்தி மற்ற கமாண்டோ வீரர்கள் பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.

தேசியப் பாதுகாப்பு படை வீரர் ஹவில்தார் கஜேந்திர சிங் அவர்கள் வீரமரணம் அடைந்தார்.

ஹவில்தார் கஜேந்திர சிங் அவர்களின் வீரம் அலாதியானது.நரிமன் ஓட்டலை இரகசியமாக அதிரடியாக தாக்குதவது தான் வீரர்களின் குறிக்கோள்.ஆனால் மீடியாக்கள் அவற்றை தொடர்ந்து நேரலையில் ஔிபரப்பியதால் பாக்கில் இருந்து இதைப் பார்த்த தீவிரவாதிகளை இயக்கியவர்கள் உள்ளே இருந்த தீவிரவாதிகளை உசார்படுத்தினர்.இதனால் விழிப்படைந்த தீவிரவாதிகள் உள்ளே இருந்த மக்களை கொன்று விட்டு வீரர்களுக்காக காத்திருந்தனர்.முதல் குழுவீரர்களை வழிநடத்திய கஜேந்திர சிங் தீவிரவாதிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பை கண்டார்.அவர்கள் கினேடுகளை வீசி தாக்கினர்.தன் பக்கம் விழுந்த கிரேனையும் பொருள்படுத்தாமல் , பின்னடைந்தால் தோல்வி ஏற்படும் என உணர்ந்து அந்த சமயத்தை பயன்படுத்தி மற்ற வீரர்களுக்கு வழிஏற்படுத்த முயன்ற அதே நேரத்தில் அவரது உடம்பை தோட்டாக்கள் துளைத்து சென்றது.பின்னால் வந்த வீரர்கள் இரு தீவிரவாதிகளையும் கொன்றனர்.போரில் காட்டிய வீரதீர சாகசம் காரணமாக கஜேந்திர சிங் அவர்களுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.இதே நேரத்தில் இந்திய உளவுத்துறை பாக்கில் இருந்து இங்கிருந்த தீவிரவாதிகளை இயக்கியவர்களின் தொலைப்பேசி பேச்சை இடைமறித்து கேட்க அதில் யூதரல்லாதவர்களின் உயிரை விட யூதர்களின் உயிர் 50மடங்கு முக்கியம் என கூறியிருந்தனர்.சில இறந்த யூதர்களின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது அவர்களை சித்திரவதைக்குள்ளானதை குறிக்கிறது.