பீகாரில் பிறந்த கார்போரல் நிரலா கடந்த 2005ல் விமானப் படையில் இணைந்தார்.கருட் கமாண்டாே படையில் இணைந்த அவர் காஷ்மீருக்கு 13வது இராஷ்டீரிய ரைபிள்சில் இணைந்து பணியாற்ற சென்றார்.
காஷ்மீரின் பந்திபோராவில் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகளை குறித்த தகவல் கிடைத்ததும் அவர்களை அழிக்க கருட் கமாண்டோ படை மற்றும் 13வது RR அனுப்பப்பட்டது.இலகுரக இயந்திர துப்பாக்கியுடன் நிராலா அவர்களது படைப்பிரிவு பயங்கரவாதிகள் இருந்த வீட்டை அடைந்தனர்.வீடு வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டன.
பயந்த பயங்கரவாதிகள் ஆறு பேரும் கிரேனேடு வீசி சுட்டுக்கொண்டே தப்பிக்க முயன்றனர்.சுதாரித்த நிராலா அவர்கள் தாக்கியது “A” கேட்டகிரி முக்கிய பயங்கரவாதியை கொன்று இரு பேரை காயப்படுத்தினார்.அதே நேரம் பயங்கரவாதிகள் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு பின்னர் வீரமரணம் அடைந்தார்.
அந்த என்கௌன்டரில் ஆறு முக்கிய பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.அதில் லஷ்கர் தலைவர் ஷகிர் ரக்மான் லக்வியின் மருமகனும் கொல்லப்பட்டான்.
போரில் காட்டிய வீரம் காரணமாக அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.