மும்பை தாக்குதல் – முழுமையான விளக்கம்

அவர்கள் அப்போது தான் இந்தியாவினுள் நுழைந்திருந்தனர்.அவர்களின் குறிக்கோள் மும்பையின் அமைதியை நிரந்தரமாக தகர்ப்பதே.எட்டு இடத்தை குறிவைத்து தாக்கினர்.சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்,ஓபராய் ஓட்டல்,தாஜ் பேலஸ்,லியோபோல்ட் கபே,காமா மருத்துவமனை, நரிமான் இல்லம்,யூதர்கள் சமூக அமைப்பு இருந்த இடம்,மெட்ரோ சினிமா,டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிலையம் அருகே மற்றும் சென் சேவியர் கல்லூரி ஆகிய இடங்களை தாக்கினர்.மேலும் மும்பை துறைமுகப் பகுதியான மசகான் (அங்கு தான் நமது கப்பல் கட்டும் தளம் உள்ளது) மற்றும் விலே பார்லே அருகே ஒரு டாக்சியிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

மும்பை தீவிரவாதத்தின் கோர முகத்தை அன்று கண்டது.இந்தியாவின் பொருளாதார நகரத்தின் மீது விழுந்த அடி என்பதால் உலகமே உற்று நோக்கியது.இந்தியா முழுவதும் தனது கரங்களை கசக்கியபடி மும்பையில் என்ன தான் நடக்கிறது என தொலைக் காட்சி முன் (14 வயது சிறுவனாக நான் அதை பார்த்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.எனக்கு இராணுவத்தின் மீது ஈர்ப்பு இந்த நொடியில் தான் ஏற்பட்டது) உட்கார்ந்திருந்தது.மும்பைவாசிகளுக்கோ தாங்கள் மீது யாரோ போர் தொடுத்த உணர்வு.அவர்களின் மொத்த பாதுகாப்பு உணர்வும் தகர்ந்திருந்தது.இந்தியாவே சிறிது நேரம் செயல்படாதிருந்த உணர்வு.செய்திகளில் ஒவ்வொரு இடத்திலும் குண்டு வெடிப்பு,துப்பாக்கிச் சூடு அலரல்கள்.இந்தியாவின் மொத்த வெறுப்பும் பாக் மீதிருந்தது.காரணம் இதற்கு அவர்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் என மக்களுக்கு தெரிந்திருந்ததில் வியப்பில்லை.தங்கள் உறவினர்களை பற்றி அறிய தொலைப் பேசி அழைப்புகள் பறந்தன.இந்திய வீரர்கள் தீவிரவாதிகளை எப்படி ஒழித்தனர் என மக்கள் நேரடியாக பார்த்தனர்.அவர்களுக்கு இராணுவத்தின் மீது மரியாதை மிகுந்திருக்கும் அந்த தருணத்தில்.எதிரிகள் வாசல் வரும் வரை இராணுவத்தை யாரும் மதிப்பதில்லை என ஒரு கூற்று உண்டு.

யார் அந்த தீவிரவாதிகள்? எங்கிருந்து வந்தனர்? எவ்வாறு வந்தனர்? இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தனர் என்ற கேள்விகள் அப்போது எழவில்லை எனினும் தாக்குதல் முடிந்த மறுகணம் எல்லோர் மனத்திலும் எழுந்தது மறுக்க முடியாது.இந்திய செய்தி நிறுவனங்கள் தீவிரவாதிகள் முகங்களை நேரடியாகே ஔிபரப்பின.இது இந்தியர்களுக்கு புதுமையாக இருந்தது.மேலும் வீரர்களின் வீரமரணம் குறித்த செய்திகளும் அவர்கள் மனத்தை வாட்டியிருந்தது.இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர கோபத்தின் உச்சியில் இருந்தனர்.இந்தியா கடற் எல்லை பாதுகாப்பு அவ்வளவு மோசமானதாக உள்ளதா? இவ்வளவு பெரிய படைகள் இருந்தும் இது எப்படி நடந்தது ? இந்த தீவிரவாதிகளை கொல்ல மூன்று நாட்களா? என்ன தான் நடக்கிறது நாட்டில் என ஒவ்வொரு இந்தியனும் கேள்வி கேட்டதில் அர்த்தம் இருந்தது. கடைசியில் இந்த கேள்விகள் இந்தியா பாக் மீது போர் தொடுக்கும் அளவுக்கு அரசை இட்டுச் சென்றது என்பது அநேகம் பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

மும்பையில் குண்டு வெடிப்பு என்பது அரிதான விசயம் அல்ல.ஆகஸ்டு 2003ல் தெற்கு மும்பை பகுதியில் இரண்டு குண்டுகள் மும்பை கேட் பகுதியில் வெடித்ததில் 44பேர் கொல்லப்பட்டனர்.150 பேர் காயமடைந்தனர்.ஜீலை 2006ல் சபர்பன் ரயில் நிலையம் அருகே 11 நிமிடத்திற்குள் ஏழு குண்டுகள் வெடித்ததில் 209பேர் கொல்லப்பட்டனர்.அதில் 22 பேர் வெளிநாட்டவர்.700 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதல் பாக்கின் லஷ்கர் மற்றும் இந்தியாவின் சிமி தீவிரவாத குழுக்களால் அறங்கேற்றப்பட்டது.

2008 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எப்படி??

பயிற்சி

மும்பை 2008 தாக்குதலை அறங்கேற்ற இளைஞர்கள் தீவிரவாத குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.24 முதல் 26பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாக்கின் முசாபராத்தில் உள்ள தனித்த மலையில் இருந்த கடற்படை வீரர்கள் போர்பயிற்சி பெரும் இடத்தில் பயிற்றுவிக்கப்பட்டனர்.மேலும் மங்ளா டேம் ரிசர்வ் பகுதியிலும் பயிற்சி பெற்றதாக தகவல்கள் கூறுகிறது.

இந்திய மற்றும் அமெரிக்கா மீடியாக்களின் கூற்றுப்படி தீவிரவாதிகள் கீழ்க்கண்ட பயிற்சிகளை பெற்றனர்.

மனரீதியான பயிற்சி: இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாவதாகவும்,செச்ன்யா,பாலஸ்தீன் மற்றும் உலக அளவில் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என அந்த தீவிரவாதிகள் நம்ப வைக்கப்பட்டனர்.இந்த பயிற்சி அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த பயிற்றுவிக்கப்பட்டது.

அடிப்படை போர் பயிற்சி: லஷ்கர் தீவிரவாதிகளின் அடிப்படை போர் பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.ஆயுதங்கள் கையாள்வது போன்றவை.

நவீன பயிற்சி: டவுரா காஸ் என லஷ்கர்கள் அழைக்கும் நவீன பயிற்சி தீவிரவாதிகளுக்கு மானெஷரா தளத்தில் வழங்கப்பட்டது.அமெரிக்காவின் கூற்றுப்படி தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்கள் கையாள்வது,வெடிபொருள்களை கையாள்வது போன்றவற்றை ஓய்வு பெற்ற பாக் இராணுவ வீரரின் மேற்பார்வையில் நடைபெற்றதாக கூறியுள்ளது.மேலும் உயிர்பிழைத்திருத்தல் போன்ற இராணுவ பயிற்சிகளும் வழங்கப்பட்டனர்.

கமாண்டோ பயிற்சி: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் மிகச் சில பேரே கமாண்டாே பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.சிறப்பு கமாண்டாே பயிற்சி,தந்திரோபாய பயிற்சி, கடல் வழிகண்டுபிடிப்பு பயிற்சி போன்ற பயிற்சிகள் பிதாயின்களுக்கு (தற்கொலை தீவிரவாதிகள்) வழங்கப்பட்டது.அனைத்து பயிற்சிகளும் மும்பையை தாக்குவதை மையப்படுத்தி நடத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 10பேர் மட்டும் மும்பையை தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நீச்சல் பயிற்சி,படகோட்டும் பயிற்சி,லஷ்கர் கமாண்டர்களின் மேற்பார்வையில் நவீன ஆயுதங்களைை கையாள்வது போன்ற பயிற்சிகளை பெற்றனர்.
இவர்களுக்கு பாக் இராணுவ அதிகாரிகளும் மற்றும் பாக்உளவுத் துறையான ஐஎஸ்ஐ அதிகாரிகளும் அனைத்து உதவிகளையும் செய்தனர்.அவர்கள் தான் மும்பையில் தாக்கும் இடங்களைப் பற்றியான முழு தகவலையும் அளித்தனர்.தாஜ் மகால் பேலஸ் ,ஓபராய் ஓட்டல்,நாரிமன் வீடு,சத்ரபதி சிவாஜி நிலையம்.

26 நவம்பர் மணி இரவு 8 சரியாக இதே நேரம்.பத்து பேர் ஒரு சிறிய அதிவேக படகு வழியாக மகாராஸ்டிராவின் கொலாபா என்ற இடத்தில் இரு குழுக்களாக வந்திறங்கினர்.சில தகவலின் படி, உள்ளூர் மீனவர்கள் அவர்களை தடுத்து நீங்கள் யார் என கேட்டனர் அதற்கு தீவிரவாதிகள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என கூறியுள்ளனர்.தகவல் காவல்துறைக்கு அடுத்தடுத்து சென்றடைய ஆனால் காவல் துறை உதவியின்று இருந்துள்ளது.வந்த தீவிரவாதிகள் தாமதிக்கவில்லை.இரு குழுக்களாக பிரிந்து தாக்குதலை தொடங்கினர்.

சத்ரபதி சிவராஜ் மகாராஜ் டெர்மினஸ்

சத்ரபதி சிவாஜி நிலையம் இரண்டு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது.இஸ்மாயில் கான் மற்றும் அஜ்மல் கசாப்.காசாப் பின்பு உயிருடன் பிடிக்கப்பட்டான்.சரியாக இரவு 9:30 தாக்குதல் தொடங்கியது.பயணிகள் அறைக்குள் நுழைந்தவர்கள் ஏகே-47 துப்பாக்கியின் உதவியுடன் கண்ணை மூடி சுட தொடங்கினர்.58 பேர் கனநேரத்தில் உயிரிழந்தனர்.104பேர் படுகாயம் அடைந்தனர்.இரவு சரியாக 10:45 மணிக்கு தாக்குதலை முடித்தனர்.பாதுகாப்பு படைகளும் ,அவரச நிலை படைகளும் அப்போது தான் வந்து சேர்ந்திருந்தன.ரயில்வே அறிவிப்பாளர் விஷ்னு டாடராம் அவர்களின் சீறிய அறிவிப்பால் பல பயணிகள் நிலையத்தை விட்டு உடனே வெளியேற்றியது பல உயிர்களை காப்பாற்றியது.அங்கிருந்து வெளியேறிய தீவிரவாதிகள் பாதசாரிகளையும்,தெருக்களில் நின்ற காவலர்களையும் சுடத் தொடங்கினர்.இதில் 8 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.தீவிரவாதிகள் காவல் நிலையத்தை கடந்து சென்றனர்.தாங்கள் தீவிரவாதிகளை விட குறைவான பலத்தில் உள்ள காரணத்தால் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் விளக்குகளை அனைத்து , கதவை பூட்டியிருந்தனர்.

தீவிரவாதிகள் காமா மருத்துவமனையை நோக்கி சென்றனர்.நோயாளிகளை கொல்வது தான் அடுத்த இலக்கு.விசயமறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைத்து வார்டு கதவுகளையும் பூட்டினர்.அதே நேரத்தில் மும்பை தீவிரவாதி எதிர்ப்பு படை ஒன்றுடன் அதன் தலைமை காவல்துறை சீப் ஹேமந்த் கர்கரே அவர்கள் சிவாஜி நிலையத்தை பாதுகாப்பாக்கிவிட்டு தீவாரவாதிகளை வீழ்த்தும் நோக்கில் அவர்களை எதிர்கொள் தயாரானார்.

இந்த நேரத்தில் அந்த மாவீரரைப் பற்றி நாம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.

ஹேமந்த் கர்கரே

12 டிசம்பர் 1954ல் மகாராஸ்டிராவின் நாக்பூரில் பிறந்தவர் கர்கரே.

1982 பேட்ஜில் ஐபிஎஸ் முடித்து மும்பையின் தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.மும்பை காவல் துறையின் இணை கமிசனராக பணியாற்றினார்.உளவுத் துறையான “ரா”வின் கீழ் ஏழு ஆண்டுகள் ஆஸ்திரியாவில் பணியாற்றினார்.அவரின் சகாவான மும்பை காவல் அதிகாரி பவார் அவர்களின் கூற்றுபடி, கர்கரே காவல் துறை வட்டத்தில் செல்வாக்கு பெற்ற அதிகாரி.

26 நவம்பர் 2008 அன்று, இரவு 9.45 மணி அளவில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் அவருக்கு அழைப்பு வந்தது.சிறிது நிமிடம் தொலைக் காட்சியை இயக்கி பார்த்த போது நிலைமையின் தீவிரம் உணர்ந்து தனது உயிர்க்காக்கும் உடைகளை அணிந்து தனது தீவிரவாத எதிர்ப்பு வீரர்கள் குழுவுடன் சத்ரபதி இரயில் நிலையம் அடைந்தார்.ஆனால் அப்போது தான் தீவிரவாதிகள் தாக்குதலை முடித்து வெளியேறியிருந்தனர்.எங்கும் அழும் ஓலங்கள்.தீவிரவாதிகள் காமா மருத்துவமனையை நோக்கி சென்ற தகவல் கிடைத்து பின்தொடர்ந்து சென்றனர் அவரது குழு.

இரவு நேரம் ஆபரேசன் நடத்த கடினமானது.வந்தவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் மற்றும் நன்கு ஆயுதம் தரித்து எதற்கும் தயாராகவே வந்திருந்தனர்.

சில காண்ஸ்டபிள்கள் மற்றும் சில அதிகாரிகளே கர்கரே குழுவில் இருந்தனர்.அவர்கள் காமா மருத்துவமனையை பின்னால் வழியாக நெருங்கினர்.சில கான்ஸ்டபிள்கள் பின்பக்க கேட்டில் நிறுத்தி, மற்றவர்கள் குவாலிஸ் ஜீப்பில் நெருங்கினர்.சீனியர் காவல் ஆய்வாளர் விஜய் ஜலஸ்கார் வண்டியை ஓட்டுநரிடம் இருந்து பெற்று ஓட்ட முனைந்த அதே வேளையில் தீவிரவாதிகள சிவப்பு காருக்கு பின்னால் ஔிந்திருக்கின்றனர் என்ற தகவல் ரேடியோ வழியாக கேட்டனர்.அதே நேரத்தில் தான் கமா மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் அவர்களுக்கு கிடைத்தது.

விஜய் ஜலஸ்கார்

மும்பை காவல்துறையில் பணியாற்றிய என்கௌன்டர் ஸ்பெசலிஸ்ட் தான் விஜய் அவர்கள்.மும்பையின் புகழ்பெற்ற அருண் கவ்லி என்ற கேங்கை சேர்ந்த கிட்டத்தட்ட 75-80 பேரை என்கௌன்டரில் சாய்த்தவர்.ஒரு சிறந்த தேசபிமானி.தேசத்திற்காக தனது இன்னுயிரை 49வது வயதில் இழந்தார்.

அசோக் கம்டே

மும்பை காவல் துறையின் கூடுதல் கமிசனராக பணியாற்றினார்.மும்பை கிழக்கு பகுதிக்கு இவரே தலைமை.எந்த பிரச்சனையும் எளிதில் தீர்க்கும் திறமையுடையவர்.ஒரு சிறந்த தேசபிமானி

காவலர்கள் சென்று கொண்டிருந்தனர்.சில கன தொலைவில் ஒரு கார்பரேசன் ஏடிஎம் அருகே நின்ற சிவப்பு காரை பார்த்த பொழுது அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பியோடுவதை கண்டனர். மும்பை காவல் துறை ஏசிபி அசோக் கம்டே மற்றும் சலஸ்கார் இருவரும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர்.அது ஒரு தீவிரவாதியின் கையில் பதிந்தது.அவனது ஏகே துப்பாக்கி கீழே விழுந்தது.வண்டியில் இருந்து கீழே இறங்கும் வேளையில் இரண்டாவது தீவிரவாதி இஸ்மாயில் கான் காவலர்களை நோக்கி சுட்டான்.அதில் துணை ஆய்வாளர் ஜாதவ் தவிர மற்ற அனைவரும் வீரமரணம் அடைந்தனர்.காரை நோக்கி வந்த தீவிரவாதிகள் அதிகாரிகளை மீண்டும் சுட்டு விட்டு அவர்களிள் காரை எடுத்து விட்டு கிளம்பினர்.படுகாயம் அடைந்த ஜாதவ் ரேடியோவில் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பினார்.தீவிரவாதிகளை வீரத்துடன் எதிர்கொண்டமைக்காக ஹேமந்த் கர்கரே ,விஜய் சலஸ்கார் மற்றும்
அசோக் கம்டே ஆகியவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கான விருதான அசோகச் சக்ரா விருது வழங்கப்பட்டது.

துணை ஆய்வாளர் ஜாதவ் அவர்களின் தகவல் படி தீவிரவாதிகள் வரும் வழியில் பெரிய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது.தீவிரவாதிகள் தங்களது காரில் வேகமாக அதை இடித்தனர்.அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இஸ்மாயில் கொல்லப்பட்டான்.அஜ்மல் கசாப் காயமடைந்தான்.அவன் காயமடைந்ததை உணர்ந்த அதிகாரி டுகராம் ஓம்பில்வாஸ் அஜ்மல் கசாப் முன் ஓடி அவனை தடுக்க முனைந்தார்.

டுகாராம் ஓம்பில்வாஸ்

1991ல் மும்பை காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்வதற்கு முன்னர் அவர் இந்திய இராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் நாய்க்காக பணியாற்றியவர்.மும்பை தாக்குதலின் போது காவல் ஜாதவின் தகவல்படி தீவிரவாதிகளை வழிமறிக்க சென்ற மற்ற காவல்துறை வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்றார்.அந்த வீரர்கள் குழு இஸ்மாயில் என்ற தீவிரவாதியை சுட்டு வீழ்த்த , அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி படுகாயமடைந்து கீழே விழுந்தான்.துப்பாக்கிகள் மற்றும் உயிர்க்காக்கும் உடைகள் எதுவுமே இல்லாத ஓம்ப்லவாஸ் அவரகள் பாய்ந்து சென்று கசாப்பின் துப்பாக்கியை பறிக்க முனைந்தார்.பறிக்கும் பொழுதே கசாப் சில ரவுண்டு துப்பாக்கி குண்டுகளை ஓம்பலே மீது செலுத்த,இந்த சிறிது நேரத்தை பயன்படுத்திய மற்ற காவலர்கள் கசாப்பை உயிருடன் பிடித்தனர்.அதே நேரத்தில் ஓம்பலே அவர்களின் உயிர் பிரிந்திருந்து.நாட்டிற்காக துணிந்து பயமின்றி செயல்பட்டமைக்காக அவருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.மேலும் சிஎன்என் நிறுவத்தின் இந்த வருடத்தின் சிறந்த இந்தியர் என்ற பட்டமும் பெற்றார்.மேலும் அவரின் ஈடுஇணையற்ற சேவைக்காக அவருக்கு சௌபட்டி என்ற இடத்தில் அவருக்கு செம்பு சிலை வைக்கப்பட்டுள்ளது.