
இந்தியா,சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்ளும் கடற்போர் பயிற்சி அந்தமான் கடற்பகுதியில் தொடங்கியது.சிட்மெக்ஸ் 2020 எனப்படும் இந்த இரு நாள் போர்பயிற்சி தற்போது தொடங்கியுள்ளது.
மூன்று நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தன்மையை மேம்படுத்தும் பொருட்டு இந்த கடற்போர் பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்த பயிற்சியின் மூலம் மூன்று நாட்டு கடற்படைகளின் உறவு வலுப்படும்.மேலும் சிறந்த பயிற்சியை மூன்று நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.
ஒருங்கிணைந்த வழிகாட்டு நடவடிக்கை,வான் இலக்கு மற்றும் தரை இலக்குகளை குறிவைத்து ஆயுத பிரயோகம், நேவல் மேனுவர்ஸ் ஆகிய போர்பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.இந்த பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் கமோர்த்தா நீர்மூழ்கி எதிர்ப்பு கார்வெட் போர்க்கப்பலும்,வழிகாட்டு ஏவுகணை கார்வெட் கப்பலான ஐஎன்எஸ் கார்முக் ஆகிய இரு கப்பல்களும் பங்கேற்றுள்ளன.
சிங்கப்பூர் கடற்படை சார்பில் பார்மிடபிள் வகை ஸ்டீல்த் பிரைகேட் கப்பலான RSS இன்டெர்பிட் மற்றும் என்டுரன்ஸ் வகை எல்பிடி கப்பலான RSS என்டவர் கப்பலும் பங்கேற்றுள்ளன.மேலும் தாய்லாந்து கடற்படை சார்பில்
HTMS கிராபுரி என்ற சௌ ரக பிரைகட் கப்பல் கலந்து கொண்டுள்ளது.
கோரானா பாதிப்பை கவனத்தில் கொண்டு மிக கவனமாக இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.கடந்த 2019ல் இது போன்ற பயிற்சி அந்தமான் பகுதியில் ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.