பழுதடையும் சீன தளவாடங்கள்; கலக்கத்தில் வாங்கிய நாடுகள்

  • Tamil Defense
  • November 7, 2020
  • Comments Off on பழுதடையும் சீன தளவாடங்கள்; கலக்கத்தில் வாங்கிய நாடுகள்

தவறான பழுதடையும் சீன தளவாடங்களால் வங்கதேசம் முதல் மியான்மர் வரை பல நாடுகள் கலக்கத்தில் உள்ளன.

1970 காலகட்ட இரு மிக் ரக டைப் 035G நீர்மூழ்கிகளை சுமார் 200மில்லியன் டாலர் செலவில் சீனாவிடம் இருந்து வங்கதேசம் வாங்கி அவற்றை BNS Nobojatra மற்றும் BNS Joyjatra எனும் பெயரில் கடந்த 2017ல் படையில் இணைத்தது.
தற்போது பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இரு நீர்மூழ்கிகளும் சும்மாவே நிற்கின்றன.

அதே போல தற்போது வங்கதேசம் இரு சீன 053H3
பிரைகேட் கப்பல்களை பெற்று BNS Umar Farooq மற்றும் BNS Abu Ubaidah எனும் பெயரில் படையில் இணைத்தது.இதிலும் நேவிசேகன் ரேடார் மற்றும் துப்பாக்கி அமைப்புகள் பழுது பட்டுள்ளன.

இதே போல மியான்மர் நாடும் பெற்ற தளவாடங்களின் தரத்தை பற்றி மகிழ்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளது.மேலும் தற்போது இந்தியாவிடம் இருந்து ஒரு நீர்மூழ்கியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாளின் கதையும் இது தான்.சீனாவிடம் இருந்து தனது ஏர்லைன்ஸ்-காக ஆறு Y12e மற்றும் MA60 விமானங்களை பெற்றது.இவை தற்போது செயல்படாமல் இருக்கின்றன.

கென்யாவும் சீனத் தயாரிப்பு VN-4 armoured personnel வாகனங்களை வாங்கியது.சுடும் சோதையின் போது சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் கூட வாகனங்களில் அமர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர்.இந்த வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சில வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அல்ஜீரியாவிற்கு CH-4B UCAV ஆளில்லா விமானங்களை சீனா விற்றது.இவையும் சில முறை கோளாறுகளால் விபத்தை சந்தித்துள்ளன.

பாகிஸ்தானுக்கு சீனா விற்ற பல தளவாடங்கள் இதுபோல் கோளாறுகளில் சிக்கியுள்ளன.
F22P பிரைகேட் கப்பல் பல தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக செயல்படாமல் உள்ளது.பாக் பெற்ற ஒன்பது LY-80 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளில் மூன்று பழுது காரணமாக செயல்படாமல் உள்ளது.