20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு

  • Tamil Defense
  • November 27, 2020
  • Comments Off on 20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு

நவம்பர் 26 அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் இருவரில் ஒருவர் தான் இருபது வயதே ஆன வீரர் யாஷ் திகம்பர் தேஷ்முக் அவர்கள்.

ரோந்து சென்ற வீரர்கள் மீது (101 மராத்தா லைட் இன்பான்ட்ரி) காரில் சென்ற மூன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் தனது நண்பருக்கு வாட்ஸ்ஆப்பில் யாஷ் அவர்கள் அனுப்பிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

தனது நண்பர் அங்கு எப்படி நிலைமை உள்ளது என கேள்வி கேட்க அதற்கு மிக உருக்கமான பதிலை யாஷ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

“நான் நலமாக உள்ளேன்.ஆனால் எங்கள் வாழ்க்கை பற்றி யார் விவரிக்க முடியும்? ஒரு நாள் இருப்போம் மறுநாள் இருக்க மாட்டோம் ” என மிக உருக்கமாக கூறியுள்ளார்.

யாஷ் அவர்களின் அப்பா ஒரு விவசாயி.அம்மா மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர்.இருவருக்கும் மணம் ஆகிவிட்டது.ஒரு தம்பி உள்ளார்.அவர் பள்ளி சென்று வருகிறார்.இராணுவத்தில் இணைவதை பெருங்கனவாக கொண்டிருந்த அவர் கடந்த வருடம் கர்நாடகாவின் பெல்கமில் நடைபெற்ற இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளார்.யாஷ் அவர்கள் மகாராஷ்டிராவின் ஜலகோன் மாவட்டத்தை சேர்ந்தவர்.