எஸ்-400 டெலிவரி; முன்னதாகவே தொடங்க இரஷ்யா முயற்சி

  • Tamil Defense
  • November 12, 2020
  • Comments Off on எஸ்-400 டெலிவரி; முன்னதாகவே தொடங்க இரஷ்யா முயற்சி

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே S-400 surface-to-air missiles ஏவுகணை அமைப்பை இந்தியாவிற்கு டெலிவரி செய்ய இரஷ்யா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் தொகுதி எஸ்-400 ஏவுகணை அமைப்பு டெலிவரி அடுத்த வருட இறுதியில் நடைபெற உள்ளது எனினும் அதற்கு முன்னதாகவே இந்த அமைப்புகளை டெலிவரி செய்ய இரஷ்யா முயற்சித்து வருகிறது.

மேலும் 200 Kamov Ka-226T வானூர்திகளை இந்திய இராணுவ படைகளுக்காக இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 2018ல் இந்தியா சுமார் 5 பில்லியன் டாலர்கள் செலவில் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை பெற இரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

400கிமீ தூரத்தில் வரும் விமானங்கள்,க்ரூஸ் ஏவுகணைகள் போன்றவற்றை சுட்டு வீழ்த்த கூடியது இந்த ஏவுகணை அமைப்பு.