2022ல் படையில் இணையும் ருத்ரம் ஏவுகணை

இந்தியாவின் முதல் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணையான ருத்ரம் 2022 வாக்கில் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள இந்த ஏவுகணை சில நாட்களுக்கு முன் சுகாய் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை படையில் இணைக்கப்படுவதற்கு முன் மேலும் ஆறு முதல் ஏழு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேடியேசன் வெளியிடும் இலக்குகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.அதாவது எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.