12மணி நேரத்தில் ஐந்து முறை அத்துமீறி தாக்கிய பாக்-ஒரு வீரர் வீரமரணம்
1 min read

12மணி நேரத்தில் ஐந்து முறை அத்துமீறி தாக்கிய பாக்-ஒரு வீரர் வீரமரணம்

ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். மற்றும் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் இராணுவ பகுதிகளை குறிவைத்து பாக் இராணுவம் கடந்த 12மணி நேரத்தில் மட்டும் ஐந்து முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

“ 21 நவம்பர் 2020ல் , ராஜோரியின் நௌசேரா செக்டாரில் அத்துமீறி தாக்கியது.இதற்கு நமது வீரர்கள் கடும் பதிலடி கொடுத்தனர்.இந்த சண்டையில் ஹவில்தார் பாடில் சங்ராம் சிவாஜி அவர்கள் படுகாயமடைந்து பின்பு வீரமரணம் அடைந்தார்” என இராணுவம் கூறியுள்ளது.

பாக் இராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் தாக்குதல்களை நடத்தியதாக மற்றொரு இராணுவ செய்தி வெளியானது.12 மணி நேரத்திற்குள் மட்டும் 5 முறை அத்துமீறி தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

இந்த தொடர் தாக்குதலில் மக்கள் வசிக்கும் பகுதியான டேக்வார்,மால்டி மற்றும் டலான் ஆகிய பகுதிகளில் பாக் தாக்குதல் நடத்தியுள்ளது.இதில் மன்ஷா என்ற 18 வயது பெண் காயமடைந்துள்ளார்.காயமடைந்த இருவரும் பூஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த தொடர் தாக்குதல்களுக்கு இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.கடந்த சில நாட்களாகவே எல்லையில் பாக் கடுமையான தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.அதற்கு இந்திய இராணுவமும் பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது.ஷெல்கள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய இராணுவம் உபயோகித்து பதிலடி கொடுத்து வருகிறது.