புதிய P-8Iஐ விமானம் பெற உள்ள கடற்படை

அமெரிக்காவிடம் இந்தியா மேலதிகமாக ஆர்டர் செய்த P-8I Poseidon விமானம் நான்கில் ஒரு விமானம் இந்த மாதம் இந்தியா வர உள்ளது.இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க இந்திய கடற்படை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே எட்டு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக நான்கு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன.தற்போது நான்கில் முதல் விமானம் இந்த மாதம் இறுதியில் வர உள்ளது.அடுத்த மூன்று விமானங்களும் அடுத்த வருடம் படையில் இணையும்.

இந்த விமானத்தின் டெலிவரி கொரானா காரணமாக தாமதம் ஆனது.முன்பு படையில் இணைக்கப்பட்ட விமானத்தை போலவே தான் இந்த விமானமும் செயல்திறன் கொண்டிருக்கும்.