லடாக்கில் உள்ள வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டுமானங்கள்

  • Tamil Defense
  • November 18, 2020
  • Comments Off on லடாக்கில் உள்ள வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டுமானங்கள்

லடாக் செக்டாரில் குளிர் அதிகரித்து வரும் வேளையில் அங்கு உள்ள வீரர்களுக்காக புதிய கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அங்கு உள்ள ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு தங்கும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் வசம் இருக்கும் சில இடங்களில் குளிர் நிலை மைனஸ் 40 டிகிரிக்கும் கீழே உள்ளது.இது போன்ற அதிஉயர் பகுதியில் பனி 30-40 அடி வரை பெய்யும்.

ஸ்மார்ட் கேம்புகளுடன் வீரர்களுக்கு தேவையான வெப்பமூட்டும் கருவிகள்,மின்சாரம்,குடிநீர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வீரர்களுக்கு தேவையான அனைத்து வதிகளும் ஏற்படுத்தப்பட்டு எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தவிர அமெரிக்காவிடம் இருந்து அதிகுளிர் தாங்கும் உடைகளும் வாங்கப்பட்டுள்ளன.இது வரை கிட்டத்தட்ட எட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.