சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி-12000கோடிகள் ஒதுக்கீடு

  • Tamil Defense
  • November 21, 2020
  • Comments Off on சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி-12000கோடிகள் ஒதுக்கீடு

இரண்டாம் கட்டமாக இந்திய சீன எல்லையில் 32 சாலைகள் அமைக்க ₹12,434.90 கோடிகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.கிழக்கு லடாக்கில் மோதல் நிலை தொடர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் ஐடிபிபி படை பிரிவு இணைந்து சாலை அமைக்க உள்ளன. அருணாச்சல்,சிக்கிம்,லடாக்,ஹிமாச்சல் மற்றும் உத்ரகண்டில் உள்ள வெளி எல்லை நிலைகளை இணைக்கும் பொருட்டு இந்த சாலைகள் அமைக்கப்படும்.

தற்போது ஆறு மாதங்களாக இந்திய-சீன மோதல் தொடர்ந்து வருகிறது.அங்கு தற்போது குளிர் சப்-ஜீரோ அளவுக்கும் குறைந்துள்ளது.பிரச்சனையை தீர்க்க தற்போது இரு நாட்டு படைகளும் எட்டு முறை தொடர்ந்து பேசியுள்ளன.

மூன்றாம் கட்டத்தில் மேலதிக 50 சாலைகள் அமைக்கப்படும். இதற்கான அனுமதி வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.