காஷ்மீரின் குப்வாராவில் உள்ள மச்சில் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் நமது படைகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
18வது மெட்ராஸ் படைப் பிரிவை சேர்ந்த மூன்று இராணுவ வீரர்களும் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரரும் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சண்டையில் வீரமரணம் அடைந்த சிபாய் மகேஷ்வர் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தெலுங்கானாவின் நிசாமதாபாத் மாவட்டத்தில் உள்ள கொமன்பள்ளி கிராமத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.