குவாட் நாடுகளின் மலபார் போர்பயிற்சி

குவாட் நாடுகள் கலந்து கொள்ளும் 24வது மலபார் போர்பயிற்சி வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

1992முதல் இந்தியா-அமெரிக்கா கடற்படைகளின் போர்பயிற்சியாக இந்த மலபார் பயிற்சி தொடங்கியது.
அதன் பிறகு 2015ல் ஜப்பான் கடற்படை இந்த போர்பயிற்சியில் இணைந்தது.

தற்போது இந்த வருடம் ஆஸ்திரேலிய நாட்டின் கடற்படையும் இணைந்துள்ளது.

அமெரிக்கா சார்பில் இந்த பயிற்சியில் ஜான் மேக்கெய்ன் என்ற டெஸ்ட்ராயர் கப்பலும்,ஆஸ்திரேலியா சார்பில் பாலரட் என்ற பிரைகேட் கப்பலும்,எம்எச்-60 வானூர்தியும்,ஜப்பான் சார்பில் எஸ்எச்-60 வானூர்தியுடன் ஒனாமி டெஸ்ட்ராயர் கப்பலும் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா சார்பில் ரியர் அட்மிரல் சஞ்சய் வாட்சயன் சார்பில் ரன்விஜய் டெஸ்ட்ராயர்,சிவாலிக் பிரைகேட், சுகன்யா கடலோர ரோந்து கப்பல், சக்தி மற்றும் சிந்துராஜ் நீர்மூழ்கி ஆகியவை கலந்து கொண்டுள்ளன.

தவிர ஹாக், பி8ஐ, டோர்னியர் ஆகிய விமானங்களும் கலந்து கொண்டுள்ளன.கொரானா தடுப்பு குறித்த அனைத்து முன்னெச்சரிக்கைகளுடன் இந்த போர்பயிற்சி நடந்து வருகிறது.