மிக்-29 விமான விபத்து-விமானியை தேடும் பணி தீவிரம்

  • Tamil Defense
  • November 27, 2020
  • Comments Off on மிக்-29 விமான விபத்து-விமானியை தேடும் பணி தீவிரம்

வியாழன் அன்று நடைபெற்ற மிக்-29 பயிற்சி விமான விபத்தில் சிக்கிய ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார்.மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

26 நவம்பர் அன்று மாலை 5மணி அளவில் பயிற்சியில் இருந்த மிக்-29கே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய இரு விமானிகளில் ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார்.மற்றொரு விமானியை வான் மற்றும் கடற்பரப்பு வழியாக தேடி வருகிறது கடற்டை.

இந்த விமான விபத்து குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.