
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மேம்பாடு அடைந்து வருகிறது.இந்தியா-சீனா சண்டை தற்போது நடைபெற்று வரும் வேளையில் தற்போது இந்திய கடற்படை அமெரிக்காவிடம் இருந்து இரு பிரிடேட்டர் ட்ரோன்களை குத்தகைக்கு பெற்று படையில் இணைத்துள்ளது.
அவசர கால இறக்குமதியாக இந்த ரக ட்ரோன்களை பெற்று இந்திய கடற்படை தற்போது படையில் இணைத்துள்ளது.ஏற்கனவே 30 ட்ரோன்களை வாங்க முயற்சித்து நிதி பற்றாக்குறையால் தாமதம் அடைந்து வந்தது.
இந்த ட்ரோன்கள் நவம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தியா வந்தடைந்தது.கடந்த நவம்பர் 21 ல் ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் வைத்து படையில் இணைக்கப்பட்டது.
தொடர்ந்து 30 மணி நேரம் பறக்க கூடிய இந்த ட்ரோன்கள் ஏற்கனவே படையில் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.கண்டிப்பாக கடற்படைக்கு ஒரு ஆகப் பெரிய பலத்தை கண்காணிப்பு சக்தியை இந்த ட்ரோன்கள் வழங்கும்.
இந்த ட்ரோன்கள் இந்திய வண்ணம் பூசப்பட்டு பறக்கும்.ஒரு வருடத்திற்கு மட்டுமே தற்போது குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.தற்போது மேலதிக 18 இதுபோன்ற ட்ரோன்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சீன பிரச்சனையில் இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கி பணியாற்றி வருகிறது.தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவிற்கு வழங்கி வருகிறது.
குத்தகைப்படி அமெரிக்க குழு விமானத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே வழங்கும்.ஆபரேசன் திட்டம் மற்றும் விமானத்தை இயக்குதல் ஆகியவை இந்திய கடற்படை வசமே இருக்கும்.
கண்காணிப்பின் போது கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் இந்திய கடற்படை வசமே இருக்கும்.