பங்கோங் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்கள் களமிறக்கம்

  • Tamil Defense
  • November 29, 2020
  • Comments Off on பங்கோங் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்கள் களமிறக்கம்

இந்திய சீன எல்லை மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் கிழக்கு லடாக்கில் உள்ள பங்கோங் ஏரியில் இந்திய கடற்படை தனது மரைன் கமாண்டோ வீரர்களை களமிறக்கியுள்ளது.

இந்திய சீன மோதல் தொடங்கி ய நாள் முதலாகவே லடாக்கில் இந்திய இராணுவத்தின் சிறப்பு படையான பாரா படைப்பிரிவும், இந்திய விமானப்படையின் சிறப்பு படையான கருட் கமாண்டோ படையும் அங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கடற்படையின் சிறப்பு படையான மரைன் கமாண்டோ வீரர்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.இதன் மூலம் மூன்று சிறப்பு படைகளும் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பாக இருக்கும்.

மேலும் அங்கு களமிறக்கப்பட்டுள்ள மரைன் கமாண்டோ வீரர்களுக்கு நடவடிக்கைகளுக்காக புதிய கப்பல்களும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அங்கு இராணுவத்தின் சிறப்பு படையான பாரா படையுடன் சிறப்பு முன்னனி படை எனப்படும் அதிரகசிய படையான எஸ்எப்எப் படையும் நெடுங்காலமாக செயல்பட்டு வருகிறது.

சண்டை தொடங்கிய சில நாட்களிலேயே இந்திய படைகள் சில முக்கிய மலைப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.இந்த மலைப் பகுதிகளில் இந்திய விமானப்படையின் சிறப்பு படையா் கருட் கமாண்டோ வீரர்கள் தங்களது இக்லா தோளில் வைத்து ஏவக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளுடன் உள்ளனர்.எதிரியின் வான் படை நமது எல்லைக்குள் நுழைந்தால் அவர்களை தாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் மற்றும் விமானப்படையின் சிறப்பு படைகள் கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக லடாக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய கடற்படை ஏற்கனவே காஷ்மீரின் வுலார் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்களை களமிறக்கி உள்ளது.அதே போல 2016 பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படையின் சிறப்பு படையும் காஷ்மீருக்கு நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டது.