பிரம்மோஸ் தொடர் சோதனை-அடுத்த மாதம் திட்டம்

  • Tamil Defense
  • November 16, 2020
  • Comments Off on பிரம்மோஸ் தொடர் சோதனை-அடுத்த மாதம் திட்டம்

சீனாவுடனான எல்லை மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அடுத்த மாத இறுதியில் இந்திய பாதுகாப்பு படைகள் பிரம்மோஸ் ஏவுகணையை தொடர்ச்சியாக சோதனை செய்ய உள்ளன.

உலகிலேயே மிக வேகமான சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோசின் தாக்கும் தொலைவு தற்போது 300கிமீ இருந்து 450ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட உள்ளன.கடந்த இரு மாதங்களாகவே டிஆர்டிஓ தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கூட பிரம்மோசின் வான் வகை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.தஞ்சாவூர் தளத்தில் உள்ள சுகாய் விமான ஸ்குவாட்ரானில் இந்த பிரம்மோஸ் ஏவுகணையை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்திய கடற்படையும் சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்தது.