
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிர்னி எனும் பகுதியில் நான்கு ஏகே துப்பாக்கிகள் ,கிரேனேடு ஆகியவை கொண்ட பை ஒன்றை இராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையின் எஸ்ஓஜி மற்றும் 10வது அஸ்ஸாம் ரெஜிமென்ட் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய கல்லுக்கு கீழே இந்த பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.அதில் இருந்து நான்கு ஏகே ரக துப்பாக்கிகள்,141 ரவுண்டுகள்,நான்கு மேகசின்கள்,ஒரு ஏஜிஎல் கிரேனேடு,இரு கை கிரேனேடு
ஆகியவை இருந்தன.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கம் இந்த ஆயுதங்களை காஷ்மீருக்குள் கடத்த முயற்சித்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.