அமெரிக்காவில் இருந்து அதிககுளிர் தாங்கும் உடைகள் இறக்குமதி

  • Tamil Defense
  • November 3, 2020
  • Comments Off on அமெரிக்காவில் இருந்து அதிககுளிர் தாங்கும் உடைகள் இறக்குமதி

இந்திய-சீன எல்லையில் தற்போது பணிபுரிந்து வரும் வீரர்களுக்காக அமெரிக்காவில் இருந்து அதிக குளிர் உடைகள் பெறப்பட்டு உள்ளன.

வருகின்ற குளிர்காலத்தை வீரர்கள் சமாளிக்கும் வண்ணம் இந்த உடைகள் தற்போது பெறப்பட்டுள்ளன.முதல் தொகுதி உடைகள் தற்போது இந்தியா வந்துள்ளன.

கிழக்கு லடாக் மற்றும் சியாச்சின் பகுதிகளில் பணிபுரிந்து வரும் வீரர்களுக்காக இதுபோன்ற 60000 உடைகளை இந்தியா பராமரித்து வருகிறது.

தற்போது லடாக்கில் 90000க்கும் மேல் வீரர்கள் இருப்பதால் மேலதிக 30000 உடைகள் தேவையாக இருந்தது.தற்போது மேலதிக உடைகள் வாங்கப்பட்டு இருப்பதால் வீரர்கள் வரும் குளிரை சமாளிக்க இவை உதவும்.