
இந்தியா இன்று தரை இலக்குகளை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது.அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.
இந்தியா தற்போது தொடர் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் வேளையில் பிரம்மோசின் ஏவு தொலைவை நீட்டிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.இந்தியா சுமார் 1500கிமீ வரை செல்லும் பிரம்மோஸ் மேம்பாடு திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த ஏவுகணையை தரை,நீர் மற்றும் ஆகாயம் என அனைத்திலும் ஏவ முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்தியா ஏற்கனவே செப்டம்பர் மாதம் 400+கிமீ செல்லும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.தற்போது பிரம்மோசின் தாக்கும் தொலைவை மேலும் நீட்டிப்பது குறித்து முப்படைகளிடமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர்சோனிக் ரக ஏவுகணை மேம்பாடும் நடைபெற்று வருகிறது.800 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை அடுத்த வருடம் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1500கிமீ தூரம் வரை செல்லக்கூடிய ஏவுகணை மேம்பாடும் நடைபெறுகிறது.முதற்கட்டமாக இந்த ஏவுகணை தரை இலக்குகளை தாக்கும் வகையாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.