
ஏர்பஸ் டிபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ஆறு Airbus A330 Multi Role Tanker Transport (MRTT) விமானங்களை இந்திய விமானப்படை குத்தகைக்கு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவை இந்திய விமானப்படையில் குறைந்த காலத்திற்கு செயல்படும்.ஒப்பந்தம் ஏற்பட்டால் “ஏர் டேங்கர்” நிறுவனம் ஆறு விமானங்களை இந்திய விமானப்படைக்காக பராமரிக்கும்.விமானப்படைக்கு எப்போது தேவைப்பட்டாலும் இந்த விமானங்களை உபயோகிக்கும்.ஆறு தவிர மேலதிக 2-3 விமானங்களும் இந்த விமானங்களோடு இருக்கும்.நமக்கு ஆறு விமானங்கள் எப்போதும் தயாராக இருக்கும்.
இந்திய விமானப்படையில் தற்போது குறைவான அளவிலேயே டேங்கர் விமானங்கள் உள்ளன.ஒரு நவீன விமானப்படைக்கு டேங்கர் விமானங்கள் மிக அவசியமானதாகும்.போர்விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப இந்த விமானங்கள் உதவும்.