பிலிப்பைன்சிற்கு பிரம்மோஸ் ஏற்றுமதி-இந்தியா தயார்
1 min read

பிலிப்பைன்சிற்கு பிரம்மோஸ் ஏற்றுமதி-இந்தியா தயார்

இந்திய பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ் தலைவர் இருவரும் அடுத்த வருடம் சந்தித்து பேச உள்ளனர்.இந்த சந்திப்பின் போது பிரம்மோஸ் ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிரம்மோஸ் ஏவுகணை பெறும் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் இருக்கும்.

இதற்காக BrahMos Aerospace நிறுவனத்தில் இருந்து ஒரு குழு பிலிப்பைன்ஸ் வரும் டிசம்பர் மாதம் செல்லும் என கூறப்படுகிறது.பிலிப்பைன்ஸ் நாடு தரைப் படை வகை பிரம்மோஸ் ஏவுகணையை பெற உள்ளது.

அனைத்தும் திட்டமிட்டபடி செல்லும் பட்சத்தில் உரிய நேரத்தில் இந்த ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகும்.சந்திப்பு குறித்த இறுதி கட்ட தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தாலும் வரும் பிப்ரவரி மாதத்தில் சந்திப்பு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.