இலகுரக வானூர்தி தயாரிப்பு;விரைவில் தொடங்குகிறது ஹால்

  • Tamil Defense
  • November 13, 2020
  • Comments Off on இலகுரக வானூர்தி தயாரிப்பு;விரைவில் தொடங்குகிறது ஹால்

அதிஉயர் மலைப் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு தொடர் சப்ளைகள் அனுப்பு மிக முக்கிய தேவையாக உள்ள இலகுரக வானூர்திகள் தயாரிப்பை தொடங்க உள்ளது ஹால் நிறுவனம்.

light utility helicopter (LUH) எனப்படும் இந்த வானூர்தி லடாக் பிராந்தியத்தில் சோதனை செய்யப்பட்டது.தற்போது மிக குறைந்த அளவில் ஹால் நிறுவனம் இந்த வானூர்திகளை தயாரித்துள்ளது.

முதலில் 12 வானூர்திகளும் அதன் பிறகு சுமார் 180+ வானூர்திகளும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் தொகுதி 12 வானூர்திகளும் 28 மாதங்களுக்குள் படைகளுக்கு டெலிவரி செய்யப்படும்.

வெளிநாட்டு வானூர்திகளை இறக்குமதி செய்வதை விட இவற்றின் விலை மிக குறைவு தான்.