
எல்லையில் பாக் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.தவிர ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரரும் ,பெண் ,குழந்தை உட்பட நான்கு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீரில் குரேஷ் செக்டார் முதல் உரி செக்டார் வரை பாக் படைகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மற்றும் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
உரியின் நம்பாலா செக்டாரில் பாக் தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஹஜிபீர் செக்டாரில் ஒரு பிஎஸ்எப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.மற்றொரு வீரர் காயமடைந்துள்ளார்.
இது தவிர பொதுமக்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.கேரன் செக்டாரில் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.இதை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்துள்ளனர்.
39வயதான பிஎஸ்எப் வீரர் ராகேஷ் தோவல் அவர்கள் தான் வீரமரணம் அடைந்துள்ளார். பிஎஸ்எப் படையின் ஆர்டில்லரி பிரிவில் பணியாற்றி வந்த ராகேஷ் அவர்கள் இன்று நடந்த மோதலில் வீரமரணம் அடைந்துள்ளார்.
இந்திய இராணுவம் கடுமையான எதிர் தாக்குதலை நடத்திவருகிறது.இந்த தாக்குதல்களில் ஏழு முதல் எட்டு பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்..