கடலில் ஏவப்பட்ட ஐந்தாவது ஸ்கார்பின் நீர்மூழ்கி ஐஎன்எஸ் வகிர்

புரோஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் ஐந்தாவது ஸ்கார்பின் ரக நீர்மூழ்கியாக ஐஎன்எஸ் வகிர் கடலில் ஏவப்பட்டது.

பிரான்சின் Naval design & DCNS நிறுவனத்துடன் இணைந்து மொத்தம் ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கிகள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகிறது.முதல் நான்கு கப்பல்கள் படையில் இணைக்கப்பட்டும் சோதனையிலும் உள்ளன.

கல்வாரி,காந்தேரி,கரன்ஜ் மற்றும் வேலா ஆகிய நான்கு நீர்மூழ்கிகளும் ஏற்கனவே ஏவப்பட்டு சில படையிலும் இணைக்கப்பட்டுவிட்டன.தற்போது வகிர் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் படையில் இணைக்கப்படும்.

முதல் இரு நீர்மூழ்கிகள் படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.ஆறாவது நீர்மூழ்கியான வக்சீர் தற்போது கட்டப்பட்டு வருகிறது.