
திறன் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள திறன் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு ஒடிசா கடலோர பகுதியில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னால் இருந்த ரகத்தை விட இந்த புதிய ராக்கெட்டுகளின் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் புனேவில் உள்ள ARDE மற்றும் HEMRL நிறுவனங்கள் மேற்கொண்டன.
மொத்தமாக ஆறு ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக ஏவி பரிசோதனை செய்யப்பட்டன.இந்த ராக்கெட்டுகளை தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று M/s Economic Explosives Limited நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது தயாரிப்பில் உள்ள பினாகா மார்க்-1 ராக்கெட்டுகளுக்கு பதிலாக இந்த புதிய ராக்கெட்டுகள் தயாரித்து படையில் இணைக்கப்படும்.
கிட்டத்தட்ட 50கிமீ தூரம் வரை இலக்குகளை அழிக்க வல்லது.