
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் இன்னும் தொடர்கிறது.இந்திய படைகளின் தேர்ந்த நடவடிக்கைகளால் சீனாவின் எந்த சாகசத்திற்கும் பதிலடி தீர்க்கமாக வழங்கப்படுகிறது என தளபதி ராவத் கூறியுள்ளார்.
எல்லைக் கோட்டை மாற்றும் எந்த செயலையும் இந்தியா அனுமதிக்காது என அவர் தீர்க்கமாக கூறியுள்ளார்.
அணுஆயுதம் என்ற பாதுகாப்பு குடைக்குள் பதுங்கி இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்ப முயற்சி செய்த பாகிஸ்தானுக்கு உரி மற்றும் பாலக்கோட் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
பாக்கிற்கு தனது உள்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.அவற்றை மறைக்க காஷ்மீரின் பக்கம் உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்ப பாக் முயற்சித்து வருகிறது.