செர்பா கவச வாகனத்தை படையில் இணைக்க உள்ள சிஆர்பிஎப் படை

  • Tamil Defense
  • November 9, 2020
  • Comments Off on செர்பா கவச வாகனத்தை படையில் இணைக்க உள்ள சிஆர்பிஎப் படை

மத்திய ஆயுதம் தாங்கி படைப் பிரிவுகளில் ஒன்றான சிஆர்பிஎப் படை கவச வாகனமான ரெனால்ட் செர்பா வாகனத்தை படையில் இணைக்க உள்ளது.இந்த வாகனத்தை பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் பயன்படுத்தும்.

இந்த வாகனத்தை பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரான ‘Renault Trucks Defense’ நிறுவனம் தயாரிக்கிறது.தற்போது வாகனத்தை சோதனை செய்து வருவதாகவும் விரைவில் ஆபரேசன்களுக்காக படையில் இணைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கவச வாகனங்கள் இல்லாமல் சிஆர்பிஎப் படை பல முறை தாக்கப்பட்டு உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இவற்றை தவிர்க்க கவச வாகனங்களை அதிக அளவில் படையில் இணைப்பதே சரியான முடிவாகும்.